சென்னை: சூர்யா நடித்து அவரது 42வது படத்தின் டைட்டில் சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
சூர்யா 42 என டைட்டிலில் உருவாகி வந்த இந்தப் படம் தற்போது கங்குவா என பெயர் மாறியுள்ளது.
இந்தப் படம் குறித்து சூர்யா ரசிகர்கள் அடிக்கடி டிவிட்டரில் புகழ்பாடி வருகின்றனர்.
அதில் ஒரு ரகளையான டிவிட்டர் போஸ்ட் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ரசிகரை அட்டாக் செய்தாரா சூர்யா?
சூர்யா தற்போது 42வது படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என உருவாகி வந்த இந்தப் படத்திற்கு தற்போது கங்குவா என்ற டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் பிரம்மாண்டமாக தயாரிப்பில் 10 மொழிகளில் உருவாகும் இந்தப் படம், 3டி தொழில்நுட்பத்தில் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹிஸ்டாரிக்கல் ஜானரில் பேண்டசியாக உருவாகும் இந்தப் படம் சூர்யா கேரியரில் தரமான சம்பவமாக இருக்கும் என கூறப்படுகிறது. அதேநேரம் இந்தப் படத்தின் கங்குவா என்ற டைட்டிலும் நெட்டிசன்களால் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டது. கங்குவா என்பது தமிழ்ப் படத்துக்கான டைட்டில் இல்லை எனவும், இது இந்தி சீரியலின் தலைப்பு மாதிரி இருப்பதாகவும் ட்ரோல் செய்யப்பட்டது.
ஆனால், 10 மொழிகளுக்கும் பொதுவான பெயராக இருக்க வேண்டும் என்பதால் தான், கங்குவா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ரசிகர்களுக்கு இந்த டைட்டில் பிடிக்கவில்லை என்றாலும், சூர்யாவுக்காக கொண்டாடி வருகின்றனர். சூர்யா 42 டைட்டில் டீசரை தொடர்ந்து, மே மாதம் இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.
இந்நிலையில், ரசிகர்கள் சிலர் சூர்யாவின் கங்குவா படத்திற்கு வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதில், “ஜஸ்ட் ஒன் தலைவா சூர்யா தான். நீ யாருன்னு கங்குவா படத்தில் காட்டணும்” என பதிவிட்டுள்ளனர். இதனை சூர்யாவின் பேக் டிவிட்டர் ஐடியில் இருக்கும் ஒருவர் ஷேர் செய்து, “காட்டலாம் அதுக்கு நீங்க முதல்ல தியேட்டர்ல போய் மூவி பாருங்க” என கமெண்ட் செய்துள்ளார்.

இது சூர்யாவின் பேக் ஐடி எனத் தெரியாமல், சூர்யாவே அவரது ரசிகர்களை இப்படி கலாய்த்துள்ளாரே என பலரும் கூறி வருகின்றனர். மேலும், நீங்க முதலில் படத்தை தியேட்டரில் ரிலீஸ் பண்ணுங்க சூர்யாவுக்கே அட்வைஸ் செய்துள்ளனர் சிலர். இன்னும் சில நெட்டிசன்கள் இது சூர்யாவின் பேக் ஐடி என கண்டுபிடித்து அந்த நபரை திட்டி கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.
தியேட்டரில் வெளியாகும் படங்களை திருட்டுத்தனமாக டவுன்லோடு செய்து பார்ப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. அதனை குறிப்பிடும் விதமாகவே இந்த டிவிட்டர் பதிவும் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.