ஹோம் மேக்ஓவர் டேஸ்-வீட்டு மேம்பாட்டிற்கான தயாரிப்புகளுக்கு 70% வரை தள்ளுபடி கிடைக்கும்
டாட்டூ போட்டுக் கொள்ளும் மோகம் தற்போது பிரபலமாகி வருகிறது. இளவயதினர் முதல் மத்திய வயதினர் வரை டாட்டூ போட்டுக் கொள்கின்றனர். இந்தநிலையில் குழந்தைகளுக்கு டாட்டூ போடப்போய் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கின்றனர் அமெரிக்க பெற்றோர்.
சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு போறேன்; தழுதழுத்த குரலில் பேசிய டி ஆர் ராஜேந்திரன்
அமெரிக்காவைச் சேர்ந்த மேகன் மே ஃபர் எனும் 27 வயது கணவனும், அவரது மனைவியான 23 வயதான கன்னர் ஃபர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். குழந்தைகளுக்கு விருப்பமில்லாமல் வலுக்கட்டாயமாக டாட்டூ போட்டு, அவர்களை சித்திரவதை செய்த காரணத்தால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தங்களது 9 வயது மற்றும் 5 வயதுடைய இரு குழந்தைகளை வலுக்கட்டாயமாக கை கால்களை கயிறால் கட்டி, டேப்பால் வாயை மூடி தோளிலும், காலிலும் டாட்டூ போட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. வலியால் குழந்தைகள் வீறிட்டு அழக்கூட முடியாமல் தவித்துள்ளனர். குழந்தைகள் டாட்டூ போட்டுள்ளதை எதேச்சயாக பார்த்த அதிகாரிகள் விசாரணை நடத்திய போது தான் இந்த சித்ரவதை குறித்து தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் போலீசில் புகார் கொடுத்ததை பெற்றோர் அறிந்துள்ளனர்.
அதையடுத்து பெற்றோர் செய்தது தான் படுமோசமான காரியம். எப்படியும் போலீஸ் விசாரணையில் மாட்டி விடுவோம் என அஞ்சிய பெற்றோர், குழந்தைகளின் டாட்டூவை அழிக்க முடிவு செய்துள்ளனர். டாட்டூ போடப்பட்ட தோள் மற்றும் கால் பகுதியில் கத்தியைக் கொண்டு சுரண்டி எடுத்துள்ளனர். சதை வெளியே தெரிந்ததால், அதில் லெமன் ஜூஸ் தடவி மேக்கப் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
ராணுவத்திடம் பணிந்தது துணை ராணுவம்? சூடானில் தற்காலிக போர் நிறுத்தம் அமல்.. என்ன நடக்கிறது?
இது குறித்து ஜவல்லா காவல் தலைவர் ஜேம்ஸ் டென்பி கூறும்போது, ‘‘டாட்டூ இருந்த இடத்தில் காயங்களை கண்டோம். கத்தியை பயன்படுத்தி சுரண்டப்பட்டதற்கான தடயங்கள் இருந்தது. சிறுவர்களுக்கு எதிரான குற்ற வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கணவர் குழந்தைகளின் உயிரியல் தந்தையாவார், மனைவி குழந்தைகளின் சித்தி ஆவார்’’ என தெரிவித்தார். அதையடுத்து இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், நீதிமன்ற உத்தரவு படி சிறையில் அடைத்தனர்.