'அநியாயத்தை எதிர்த்தால் போட்டு தள்ளுவதா?' தொடரும் கொலைகள்.. கஸ்தூரி ஆதங்கம்..!

தமிழகத்தில் மணல் கொள்ளை உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை குறித்து புகார் கொடுப்பவர்களுக்கு கொலை மிரட்டல்களுக்கு ஆளாகி வருவது பரபரப்பை ஏற்படுயுள்ளது. அண்மையில் தூத்துக்குடி முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் என்பவர் கடந்த 25-ம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இவர் அப்பகுதியில் நடந்த மணல் கொள்ளையை தடுத்து வந்ததாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்றியதற்காவும் வெட்டி கொல்லப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் பணியாற்றி வந்த பிரிதிவிராஜ் என்கிற கிராம நிர்வாக அதிகாரி தாமாக தனது பணியை ராஜினாமா செய்துள்ளார்.

”ஒரு அதிகாரியாக தன்னால் எந்த மாற்றத்தையும் செய்ய முடியவில்லை” எனக்கூறி அவர் ராஜினாமா செய்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, திருக்கழுக்குன்றம் ருத்திரான் கோயில் தெருவை சேர்ந்த சர்புதீன் (40) என்பவரை நேற்று பட்டப்பகலில் 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்து தப்பியது. இவர் திருக்கழுக்குன்றத்தில் உள்ள பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததாக கூறப்படுகிறது.

தூத்துக்குடியில் வழக்கறிஞர் கொலை திருநெல்வேலி வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டம்

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இவரை கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட சர்புதீனுக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் கொலை குறித்து வழக்கு பதிவு செய்துள்ள திருக்கழுக்குன்றம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு தமிழகத்தில் சமூக பணிகளில் ஈடுபட்டவர்கள் கொல்லப்பட்டு வருவது சட்ட ஒழுங்கு மீதுள்ள நம்பிக்கையை இழக்க செய்துள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி ‘ நேர்மையாளர்கள் உயிருக்கு தமிழ்நாட்டில் உத்திரவாதம் இல்லை. இது தான் சமூக நீதியா ? எந்த ஜாதி எந்த மதமாக இருந்தாலும் அநியாயத்தை எதிர்த்தால், கேள்வி கேட்டால், போட்டு தள்ளுவதா?” என்று ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.