நெருக்கமான புகைப்படங்கள் வெளியானதால் இளம்பெண் தற்கொலை! காதலன் எடுத்த விபரீத முடிவு


இந்திய மாநிலம் கேரளாவில் காதலிக்கும்போது நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியானதால், காதலி உயிரிழந்ததைத் தொடர்ந்து காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காதலித்தபோது எடுத்த புகைப்படங்கள்

கேரளாவின் கோட்டயத்தை அடுத்த கடுத்துருத்தி பகுதியைச் சேர்ந்த ஆதிரா என்ற 26 வயது பெண்ணொருவர், அதே பகுதியைச் சேர்ந்த அருண் வித்யாதர் (32) என்ற நபரை காதலித்து வந்தார்.

ஒரு கட்டத்தில் இருவரும் நெருக்கமாக இருந்தபோது புகைப்படங்கள் எடுத்துள்ளனர். அதன் பின்னர் வித்யாதரின் நடவடிக்கை சரியில்லாததால், ஆதிரா அவருடனான உறவை முறித்துக் கொண்டுள்ளார்.

நெருக்கமான புகைப்படங்கள் வெளியானதால் இளம்பெண் தற்கொலை! காதலன் எடுத்த விபரீத முடிவு | Man Leaks Lover Photos Both Suicide Kerala

இதனால் ஆத்திரமடைந்த காதலன், தன் காதலியை பழிவாங்க இருவரும் எடுத்துக் கொண்ட சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

மனஉளைச்சலில் காதலி தற்கொலை

இதனை அறிந்த ஆதிரா அதிர்ச்சியடைந்து மனஉளைச்சலுக்கு ஆளானார். இந்த நிலையில் கடந்த 2ஆம் திகதி யாரும் இல்லாதபோது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதனையடுத்து பெண்ணின் பெற்றோர் வித்யாதர் மீது பொலிஸில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் வித்யாதரை தேடி வந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த வித்யாதர் ஹொட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்தது.

அவரது உடலைக் கைப்பற்றிய பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.    

நெருக்கமான புகைப்படங்கள் வெளியானதால் இளம்பெண் தற்கொலை! காதலன் எடுத்த விபரீத முடிவு | Man Leaks Lover Photos Both Suicide KeralaSource link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.