சென்னையில் பிறந்த நாள் கொண்டாடிவிட்டு பைக் டாக்சியில் சென்ற பெண், லோரி மோதி இறந்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிறந்த நாள் கொண்டாட்டம்
சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சேவிகா என்ற 34 வயது பெண்மணி, அண்ணா சாலையிலுள்ள ஒரு தனியார் ஊடகத்தில் ஒப்பனை கலைஞராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த மே 7ஆம் திகதி பிறந்த நாள் கொண்டாட்ட அவரது தோழிகள் வீட்டிற்கு சென்றுள்ளார். தோழிகளோடு பிறந்த நாள் கொண்டாடிய அவர், அதிகாலை வேலையில் தன் வீட்டிற்கு திரும்பு சென்றுள்ளார்.
அதிகாலை 4.30 மணிக்கு சேவிகா ஒரு பைக் டாக்சியை புக் செய்துள்ளார். அப்போது அங்கு வந்த ஆனந்தன் என்ற ஓட்டுநரோடு சேவிகா ஹெல்மட் அணியாமல் பைக்கில் சென்றுள்ளார்.
லோரி மோதி விபத்து
அண்ணா சாலை அருகே வண்டி சென்று கொண்டிருக்கும் போது, வேகமாக வந்த டிப்பர் லோரி பைக் டாக்ஸி மீது மோதியதில் இருவரும் கீழே விழுந்துள்ளனர்.
இச்சம்பவத்தால் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த சேவிகாவிற்கு தலையில், பலமான காயம்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருந்திருக்கிறார்.
பைக் ஓட்டுநரான ஆனந்தனுக்கு லேசான காயங்கள் மட்டும் ஏற்பட்டிருந்த நிலையில், அவர் அங்கிருந்தவர்களின் உதவியுடன் சேவிகாவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அப்போது எதிர்பாராத விதமாக சேவிகா வழியிலேயே உயிரிழந்துள்ளார். பிறந்த நாள் கொண்டாட்டத்தின் பின் பெண் உயிரிழந்த சம்பவத்தில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.