மோசமான வானிலை – தரையிறங்க முடியாமல் தவறுதலாக இந்திய வான்பரப்புக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானம்

லாகூரில் தரையிறங்க வேண்டிய பாகிஸ்தானைச் சேர்ந்த பயணிகள் விமானம் ஒன்று கனமழை காரணமாக தவறுதலாக இந்திய வான்பரப்புக்குள் நுழைந்த நிலையில், அதிகாரிகளின் அனுமதி பெற்று மாற்றுப்பாதையில் பத்திரமாக பாகிஸ்தான் சென்றடைந்தது.

கடந்த 4ஆம் தேதி PK248 என்ற விமானம் ஓமனிலிருந்து பாகிஸ்தானின் லாகூருக்கு சென்றுகொண்டிருந்தது. லாகூரை நெருங்கும்போது கனமழை காரணமாக தரையிறங்க முடியாமல் போன நிலையில், முல்தான் விமான நிலையத்தில் தரையிறக்குமாறு கட்டுப்பாட்டு அறையிலிருந்து உத்தரவு சென்றுள்ளது.

மோசமான வானிலையால் விமானி பாதையைத் தவறவிட்ட நிலையில், விமானம் இந்திய வான்பரப்புக்குள் நுழைந்தது. தனது இக்கட்டான சூழலை இந்திய விமான கட்டுப்பாட்டு அறைக்கு விமானி எடுத்துக் கூறவே, வான்பரப்பை பயன்படுத்திக் கொள்ள இந்திய அதிகாரிகள் அனுமதி அளித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.