
‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கடந்த மே 5ஆம் தேதி சென்னையில் உள்ள 13 மல்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் மட்டும் வெளியானது. படத்திற்கு எதிராக பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தின.

இந்நிலையில் படத்திற்கு பொதுமக்கள் தரப்பிலிருந்து போதிய வரவேற்பு இல்லாததாலும், சட்டம் ஒழுங்கில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்பதாலும் இன்று (மே 07) முதல் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தின் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாகவும், இனி இப்படம் திரையிடப்படாது என்றும் மல்டிப்ளெக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்துள்ளன.