இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துவிட்டார் ரஜினிகாந்த். ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிப்பு வெளியிட்டனர்.
மேடையில் உணர்ச்சிவசப்பட்ட ஐஸ்வர்யா தத்தா!
அந்த பட வேலை முடிந்துவிட்டதால் தன் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி வரும் லால் சலாம் படத்தில் நடிக்க கிளம்பிவிட்டார் சூப்பர் ஸ்டார். லால் சலாம் படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடக்கிறது. இதையடுத்து சென்னையில் இருந்து மும்பைக்கு கிளம்பிச் சென்றுள்ளார் ரஜினி.
Jailer: ரஜினியால் கண்டிப்பா முடியும்: ஜெயிலர் வீடியோவை பார்த்தாலே தெரியுதே
ஊதா கலரு டி சர்ட்டில் விமான நிலையத்தில் ரஜினி சிரித்த முகமாக நடந்து சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோவை தலைவர் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.
அந்த வீடியோவில் ரஜினி நடந்து செல்வதை பார்த்தால் இந்த மனிதருக்கு 70 வயதுக்கு மேல் ஆகிவிட்டது என்றே நம்ப முடியவில்லை. என்ன சுறுசுறுப்பு, கம்பீரம். வயதானாலும் மனிதரின் ஸ்டைலும், அழகும், க்யூட் மைலும் அப்படியே தான் இருக்கிறது.
விமான நிலைய வீடியோவை பார்த்து ரஜினி ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள். தலைவர் ஊதா கலருக்கு மாறிவிட்டார் போன்று. விஜயவாடாவில் நடந்த என்.டி.ஆர். நூற்றாண்டு விழாவிலும் ஊதா கலரு டி சர்ட் தான் போட்டிருந்தார்.
Rajinikanth: பாலகிருஷ்ணா செய்வதை என்னால் செய்ய முடியாது, மக்கள் ஏத்துக்க மாட்டாங்க: ரஜினி
ஏ.வி.எம். சரவணனை சந்தித்து நலம் விசாரித்தபோதும் ஊதா கலரு டிசர்ட் தான் அணிந்திருந்தார். இப்போ விமான நிலையத்திற்கும் ஊதா கலரில் வந்திருக்கிறார். நீல நிறத்திலேயே பல டிசர்ட்டுகள் வைத்திருப்பார் போன்று என்கிறார்கள் தலைவர் ரசிகர்கள்.
அண்மைச் செய்திகளை உடனுக்குடன் படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
எது எப்படியோ தலைவர் தரிசனம் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் இருக்கிறார்கள் ரஜினி ரசிகர்கள். லால் சலாம் படத்தில் இஸ்லாமியராக நடிக்கிறார் ரஜினிகாந்த். அவரின் தங்கையாக நடிக்கிறார் ஜீவிதா ராஜசேகர்.
ரஜினியுடன் சேர்ந்து ஜீவிதா நடிப்பது இதுவே முதல் முறையாகும். தளபதி விஜய்யின் தம்பி விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் நடித்து வரும் லால் சலாம் படப்பிடிப்பு பாதிக்கு மேல் முடிந்துவிட்டது.
படம் நல்லவிதமாக வந்திருக்கும் சந்தோஷத்தில் இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோர் வளரட்டும் என கெரியரில் இருந்து பிரேக் எடுத்த ஐஸ்வர்யா, லால் சலாம் மூலம் மீண்டும் கோலிவுட்டில் என்ட்ரி கொடுக்கிறார்.
தனது கம்பேக் படத்திலேயே அப்பாவை இயக்கும் பாக்கியம் அவருக்கு கிடைத்திருக்கிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் இன்ஸ்டாகிராம் பக்கம் சென்றாலே ஒரே லால் சலாம் பற்றிய போஸ்ட்டுகளாகத் தான் இருக்கிறது. லால் சலாம் படக்குழுவை தன் சொந்தக் குடும்பாக பார்க்கிறார் ஐஸ்வர்யா.
லால் சலாம் படத்தில் கவுரவத் தோற்றத்தில் வருகிறார் ரஜினி. இருப்பினும் அவர் தொடர்பான காட்சிகள் ஒரு மணிநேரம் வருமாம். லால் சலாம் பட வேலையை முடித்துக் கொண்டு ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
லால் சலாமை போன்று தலைவர் 170 படத்திலும் இஸ்லாமியராக நடிக்கிறாராம் ரஜினி. உண்மை சம்பவத்தின் அடிப்படையில் தான் தலைவர் 170 படம் உருவாகவிருக்கிறதாம்.
சூர்யாவை வைத்து ஜெயம்பீம் படத்தை எடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ஞானவேல், ரஜினியை வைத்து நிச்சயம் பெரிய சம்பவம் செய்வார் என்று நம்பப்படுகிறது.