கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால், ஹனு-மேன் ரிலீஸ் தள்ளிவைப்பு

பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தேஜா சஜ்ஜா நடிப்பில் தயாராகி வரும் 'ஹனு- மேன்' படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் மே மாதம் 12ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டமிட்டபடி விஎப்எக்ஸ் பணிகள் நிறைவடையாததால் படத்தின் வெளியீட்டை தயாரிப்பு நிறுவனம் ஒத்தி வைத்திருக்கிறது.

படத்தின் தயாரிப்பாளர்கள் இது தொடர்பாக கூறும்போது “ஹனு-மேன் படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பு சிறந்த படைப்பை வழங்குவதற்கான எங்களுடைய பொறுப்பையும் உயர்த்தி இருக்கிறது. நாங்கள் அனைத்து தரப்பினரும் கொண்டாடும் வகையிலான திரைப்படத்தை வழங்குவோம் என வாக்களிக்கிறோம். பெரிய திரையில் பார்க்கத் தகுந்த படமாக உருவாக்க இன்னும் கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால் பிரமாண்ட தியேட்டர் அனுபவத்தை பெற கூடுதலாக சில நாட்கள் பொறுத்திருக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். புதிய வெளியீட்டு திகதியை விரைவில் அறிவிக்க அறிவிக்கிறோம்” என்றனர்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மராத்தி, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. தேஜா சஜ்ஜாவுடன் அமிர்தா ஐயர் வினய் ராய், வரலட்சுமி சரத்குமார், கெட்டப் சீனு, சத்யா, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சிவேந்திரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கௌரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ணா சௌரப் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.