சுபாஷ் சந்திரபோஸின் மர்ம மரணத்தை சொல்லும் 'ஸ்பை'

இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவரான சுபாஷ் சந்திர போஸ், மகாத்மா காந்தி அகிம்சை வழியில் போராடிக் கொண்டிருந்தபோது இவர் ஆங்கில அரசை வீழ்த்த இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி வந்தார். இந்த போராட்டத்தின் போது 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாகவும், ரஷ்யாவிற்குச் சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு துறவியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985ல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. நேதாஜி இறப்பின் மர்மம் இன்று வரை விலகவில்லை.

இந்த வரலாற்று நிகழ்வை பின்னணியாக வைத்து 'ஸ்பை' என்ற படம் தெலுங்கில் தயாராகி வருகிறது. பிரபல தெலுங்கு எடிட்டர் பி.எச்.கேரி இயக்குகிறார். ஈடி என்டர்டெயின்மெண்ட் சார்பில் கே.ராஜசேகர ரெட்டி, சரந்தேஜ் உப்பளதி இணைந்து தயாரிக்கிறார்கள். நிகில் சித்தார்த்தா, ஐஸ்வர்யா மேனன், சான்யா தாக்கூர், அபினவ் கோமடம், மகரந்த் தேஷ்பாண்டே, ஜிசு ஜென் குப்தா, நிதின் மேத்தா, ரவிவர்மா உள்பட பலர் நடிக்கிறார்கள். வம்சி பட்சிபுளூசு, மார்க் டேவிட் ஒளிப்பதிவு செய்கிறார்கள், விஷால் சந்திரசேகர் இசை அமைக்கிறார். தெலுங்கில் தயாரானாலும், தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளிலும் வருகிற ஜூன் 29ம் தேதி வெளியாகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.