மன்னருடைய முடிசூட்டுவிழாவில் பெரிதும் கவனம் ஈர்த்த அழகிய பெண்: யார் அவர் தெரிகிறதா?


பிரித்தானிய மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவின்போது, அவருக்கு முன்னால் வாள் ஒன்றை ஏந்தி நடந்த பெண் ஒருவர் பெருமளவில் கவனம் ஈர்த்தார்.

தலைப்புச் செய்தியான பெண்

பிரித்தானிய மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவின்போது, அழகிய நீல நிற ஆடையில், கையில் கம்பீரமாக வாள் ஒன்றை ஏந்தியவண்ணம், மன்னருக்கு முன் நடைபயின்றார் ஒரு பெண்.

பிரித்தானிய ஊடகங்கள் பலவற்றில் அவர் தலைப்புச் செய்தியாகியுள்ளார்.

யார் அந்தப் பெண்?

உண்மையில், பிரித்தானிய பிரதமர் தேர்தலின்போது அவரது பெயரும் ஊடகங்களில் தொடர்ச்சியாக வெளியானது. அவர் யார் தெரியுமா? பிரதமர் பதவிக்கான போட்டியில் ரிஷி சுனக், லிஸ் ட்ரஸ்ஸுடன் அவரும் இருந்தார்.

அவருடைய பெயர் பென்னி மார்டண்ட் (Penny Mordaunt). அவர் Lord President of the Council என்னும் முக்கிய பொறுப்பு வகிக்கிறார். அத்துடன், பென்னி, பிரித்தானிய நாடாளுமன்றத்தின் கீழவையின் தலைவரும் ஆவார்.

பென்னி, மன்னருக்கு முன் வாளேந்தி நடைபயின்றதை அவரது சக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பாராட்டியுள்ளனர். குறிப்பாக, லேபர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான Chris Bryant, பென்னி முடிசூட்டுவிழா நிகழ்ச்சியையே தன் பக்கம் ஈர்த்துவிட்டதாக வேடிக்கையாக தெரிவித்துள்ளார்.

பல்வேறு விலையுயர்ந்த கற்களால் அலங்கரிக்கப்பட்ட அந்த வாள், மன்னருடைய அதிகாரம், எது நல்லது எது கெட்டது என தீர்மானித்தல் மற்றும் அந்த வாளை ஏற்றுக்கொள்ளுதல், மன்னர் தன் கடமை மற்றும் பாதுகாக்கும் குணத்தை அங்கீகரிப்பதற்கு அடையாளமாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

மன்னருடைய முடிசூட்டுவிழாவில் பெரிதும் கவனம் ஈர்த்த அழகிய பெண்: யார் அவர் தெரிகிறதா? | Beautiful Girl Attracted Attention Coronation

Photograph: WPA/Getty Images Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.