டிடிவி-ஐ சந்திக்கும் ஓபிஎஸ்..? இன்னைக்கு 7 மணி.. திருப்பம் ஏற்படுமா..?

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம் கட்சிக்காகவும், சின்னத்துக்காகவும் கடுமையான சட்டப்போராட்டம் நடத்தினர். எதுவும் பயன் தரவில்லை. தொண்டர்களை கூட்டியாவது செல்வாக்கை காட்டலாம் என திருச்சியில் மாநாடு நடத்தினார்.

ஆனால்,

, டிடிவி தினகரன் ஆகியோர் இல்லாததால் அந்த மாநாடு எந்த திருப்பதையும் ஏற்படுத்தவில்லை. அந்த மாநாட்டுக்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த

” சசிகலா, டிடிவி-க்கு அழைப்பு விடுக்கப்படும் என கூறினார். அதை எதிர்பார்த்த தொண்டர்களுக்கு மாநாட்டின்போது ஏமாற்றமே மிஞ்சியது.

மாநாட்டுக்கு வந்தவர்களுக்கு காசு, சாப்பாடு, வெஜ் ரோல், மது என சகல விஷயங்கள் கொடுக்கப்பட்டதாகவும் அதில் பல குழுக்களுக்கு தயிர் சோறு கிடைத்ததால் கடுப்பாகி கிளம்பியதாகவும் உள்ளூர் வட்டாரம் தெரிவித்த தகவல்.

இந்த நிலையில், அதிமுகவில் இருந்து தன்னை ஓரங்கட்டிய ஆட்களுடன் கூட்டணி வைத்திருப்பதாக பாஜக மீது ஓபிஎஸ் கடும் அதிருப்தியில் உள்ளார். இதற்கிடையே சென்னை சேப்பாக்கத்தில் நடந்த சென்னை சூப்பர் கிங்க்ஸ் போட்டியை தனியாக பார்த்துக்கொண்டிருந்த ஓபிஎஸ்-ஐ திமுக தலைவர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் சந்தித்து பேசினார். அது விவாதமானது. பொதுவாக ஓ. பன்னீர்செல்வம் கிரிக்கெட் போட்டிகளுக்கு நேரம் செலவழித்து இதுபோல மைதானத்துக்கு சென்றெல்லாம் பார்த்தது கிடையாது. சேப்பாக்கத்தில் அவர் சென்றதுகூட திமுக ஏற்பாட்டில்தான் எனவும் சொல்லப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், சபரீசன் ஓபிஎஸ் சந்திப்பு நட்பு ரீதியானதுதான். எடப்பாடி பழனிசாமிதான் திமுகவுடன் கோடநாடு விவகாரத்தில் உடன்பாடோடு உள்ளார் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், மீண்டும் சமூகத்துடன் கைகோர்க்க வேண்டும் என்று நினைத்திருக்கும் ஓபிஎஸ் இன்று இரவு டிடிவி- யை சந்திக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ள ஓபிஎஸ் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் இருவரும் இன்று இரவு 7 மணிக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அவரது வீட்டில் சந்திக்க உள்ளனராம். அந்த சந்திப்பாவது அவருக்கு திருப்பத்தை ஏற்படுத்துமா என்பதை காத்திருந்து பாப்போம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.