இந்திய ராணுவத்தில் சீருடை மாற்றம் : ஆக.,1 முதல் அமலுக்கு வருகிறது| Uniform Change in Indian Army: Effective from August 1.

புதுடில்லி: நம் ராணுவத்தில், பிரிகேடியர் முதல் அதற்கு மேல் உள்ள பதவிகளை வகிக்கும் அதிகாரிகளுக்கு, ஆக.,1ம் தேதி முதல், ஒரே மாதிரியான சீருடை அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, 2019ல் இரண்டாவது முறையாக, ஆட்சி அமைத்தது முதல், ‘ஒரே ராணுவம் ; ஒரே சீருடை’ என்ற, திட்டத்தை செயல்படுத்த முனைப்பு காட்டி வந்தது.

சமீபத்தில், கடந்த மாதம் நடந்த, ராணுவ கமாண்டர் மாநாட்டில், அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்டு, சீருடை மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.

இதன்படி, பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் மற்றும் டைரக்டர் ஜெனரல் வரை உயர் பதவிகளில் உள்ள அதிகாரிகளுக்கு தலைக்கவசம், தோள்பட்டை, ரேங்க் பேட்ஜ்கள், சட்டை காலர் பேட்ஜ்கள், பெல்ட்கள் மற்றும் காலணிகள் ஆகியவை பொதுவானதாக இருக்கும்.

லேன்யார்ட்ஸ் எனப்படும் கயிறை, ராணுவ அதிகாரிகள், இனிமேல் அணியமாட்டார்கள் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கர்னல்கள் மற்றும் கீழ்நிலை அதிகாரிகள் அணியும் சீருடையில், எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

latest tamil news

ராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளதாவது:

‘ஒரே சீருடை அனைத்து மூத்த நிலை அதிகாரிகளுக்கும், பொதுவான அடையாளத்தை உறுதி செய்யும், அதே நேரத்தில் நம் ராணுவத்தின் உண்மையான நெறிமுறைகளையும் பிரதிபலிக்கும்.

இந்நடவடிக்கை, ராணுவ அதிகாரிகளிடையே சமத்துவத்தை ஏற்படுத்துவதுடன், அதிகாரிகளிடையே நல்ல ஒத்துழைப்பையும், இணக்கத்தையும் ஏற்படுத்தும்.

இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.