ஒரு படம் தானே ஹிட்டு… அதுக்குள்ள கோடியில் சம்பளம் கேட்கும் கவின்…விளாசும் நெட்டிசன்ஸ்

சென்னை : டாடா படம் வெற்றி பெற்றதை அடுத்து நடிகர் கவின் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியின் கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி போன்ற சீரியல்களில் நடித்து கவனம் பெற்றவர் கவின்.

பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு டீன் ஏஜ் பெண்களின் மனதில் இடம் பிடித்தார்.

நடிகர் கவின் : பிக் பாஸ் வீட்டில் கவின், சாண்டி மாஸ்டர், முகேன், லாஸ்லியா என நான்கு பேரும் டீமாக செயல்பட்டுக்கொண்டு இருந்தனர். இதில் லாஸ்லியாவுடன் காதல் கிசுகிசுவில் சிக்கினார். அதன்பின் கிடைத்த வரைக்கும் லாபம் என்று பணப்பெட்டியுடன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

டாடா : இதையடுத்து கவின் நடிப்பில் 2021ம் ஆண்டு வெளியான லிஃப்ட் திரைப்படம் அவருக்கு கம்பேக் கொடுத்தது. அதன்பின்னர் தற்போது கவின் நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் ரசிகர்களின் வரவேற்போடு ஹிட் லிஸ்ட்டில் இணைந்துள்ளது. கவின் ஜோடியாக பீஸ்ட் பட புகழ் அபர்னா தாஸ், முக்கியமான கேரக்டர்களில் பாக்யராஜ், விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

Actor kavin who has increased her salary due to the success of her films

கமல் பாராட்டினார் : டாடா படத்தை இளசுகள் முதல் பெரிசுகள் வரை ரசித்து ரசித்துப் பார்த்தனர். இந்த படத்தை பார்த்த நடிகர் கமல்ஹாசன் கவின் உள்ளிட்ட படக்குழுவினரை வெகுவாக பாராட்டினார். டாடா படத்தின் வெற்றியால் நல்ல ஹீரோ என தனக்கு கிடைத்த பெயரை சரியாக பயன்படுத்தி சிவகார்த்திகேயன் போல் ஆகவேண்டும் என்று திட்டம் போட்டுவிட்டார். தொடர்ந்து கவின் நல்ல கதைகளை தேர்வு செய்து கேட்டு வருகிறார்.

கோடியில் சம்பளம் : இந்நிலையில் கவினை வைத்து ஒரு பிரபல தயாரிப்பு நிறுவனம் படம் தயாரிக்க ஒரு கோடி சம்பளம் பேசியதாகவும், ஆனால், கவின் சம்பளமாக 2 கோடி கேட்டிருப்பாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், தயாரிப்பு நிறுவனம் அவ்வளவு முடியாதுமா என கையை விரித்துள்ளது. இந்த தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் ஒரு படம் தானே ஹிட்டாச்சு அதுக்குள்ள கோடியில் சம்பளமா என கேட்டு கவினை கிண்டலடித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.