முதல் இரவில் குறட்டை ..ஷாக்கான மணப்பெண்..குட் நைட் ஸ்னீக் பீக் வீடியோ!

சென்னை மணிகண்டன் நடித்துள்ள குட் நைட் திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

இப்டபத்தில் மீதா ரகுநாத்,ரமேஷ் திலக், பக்ஸ் ஆகியோர் முக்கியமான ரோலில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் மே 12ந் தேதி உலகம் முழுவதும் திரையரங்கில் வெளியாக உள்ளது.

ஜெய்பீம் : பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த ஜெய்பீம் திரைப்படத்தில் ராசாக்கண்ணு என்ற கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படத்தை அனைவரும் வெகுவாக பாராட்டினார்கள்.இப்படத்தின் மூலம் மணிகண்டன் தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்து விட்டார்.

குட் நைட் திரைப்படம் : மணிகண்டன் தற்போது, விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் உருவாகி வரும் குட் நைட் என்ற படத்தில் நடித்துள்ளார். ,இப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளன.

Manikandan stars Good night movie sneak peek out

மே 12ந் தேதி ரிலீஸ் : குறட்டை விடும் பிரச்சனை உள்ள ஒரு வாலிபரில் வாழ்க்கையில் குறட்டை என்னென்ன பிரச்சனை ஏற்படுத்துகிறது என்பதுதான் படத்தின் கதை. இந்த படத்திலும் வழக்கம் போல நல்ல நடிப்பை மணிகண்டன் வெளிப்படுத்தி இருக்கிறார். படத்தின் நாயகன் மணிகண்டன் இத்திரைப்படம் மே 12ந் தேதி வெள்ளிக்கிழமை திரையரங்கில் வெளியாக உள்ளது.

ஸ்னீக் பீக் : இந்நிலையில், இத்திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.அந்த வீடியோவில் முதல் இரவில் கணவரோடு ஆசை ஆசையாய் பேசிக்கொண்டு இருக்கும் மனைவி அதிர்ச்சி அடையும் வகையில் குறட்டைவிட்டு தூங்குகிறார் மணிகண்டன். இந்த ஸ்னீக் பீக் வீடியோவை பார்த்த ரசிகர்கள், குறட்டைவிட்டு தூங்குற நேரமா இது என்று கேட்டு வருகின்றனர்.

முதலும் நீ முடிவும் நீ : ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகி இருக்கும் இந்த படத்தில், தர்புகா சிவா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியாகி சக்கைப்போடு போட்ட முதலும் நீ முடிவும் நீ திரைப்படத்தில் நடித்த மீதா ரகுநாத் இப்படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தில் இவரின் கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.