புதுடில்லி: ஷ்ரத்தா கொலை வழக்கில் காதலன் அப்தாப் மீது கொலை வழக்கு பதிய டில்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த அப்தாப் அமீன் புனேவாலா மற்றும் ஷ்ரத்தா ஒன்றாக புதுடில்லியில் வசித்து வந்தனர். கடந்தாண்டு மே மாதம், 18ம் தேதி ஷ்ரத்தா, அவரது காதலனால் 35 துண்டுகளாக கொடூரமாக கொல்லப்பட்டார்.
அப்தாப்பை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், ஷ்ரத்தா கொலை வழக்கில் காதலன் அப்தாப் மீது கொலை வழக்கு பதிய டில்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வழக்கு ஜூன் 1க்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement