'கங்குவா' படத்திற்காக வெறித்தனமாக தயாராகும் சூர்யா: மிரள வைக்கும் லேட்டஸ்ட் லுக்.!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘கங்குவா’ படத்திற்காக உடல் எடை அதிகரித்துள்ள சூர்யாவின் லேட்டஸ்ட் லுக் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

கங்குவாசூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ‘கங்குவா’. ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்தப்படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்தப்படத்தின் மாஸான டைட்டில் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்க எதிர்பார்ப்பினை கிளப்பியது. இந்நிலையில் ‘கங்குவா’ படத்திற்காக சூர்யா வெறித்தனமாக ரெடியாகியுள்ள புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

​சிறுத்தை சிவாவுடன் இணைந்த சூர்யாவீரம், வேதாளம், விவேகம், அண்ணாத்த போன்ற செண்டிமென்ட் பேமிலி டிராமா படங்களை இயக்கியவர் சிறுத்தை சிவா. கடைசியாக ரஜினி இயக்கத்தில் ‘அண்ணாத்த’ படத்தை இயக்கினார். மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ரிலீசான இந்தப்படம் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களை குவித்தது. இதனை தொடர்ந்து தற்போது ‘கங்குவா’ படத்தை இயக்கி வருகிறார்.

​சூர்யா 42’சூர்யா 42′ என்ற பெயரில் பூஜையுடன் இதன் படப்பிடிப்பு துவங்கியது. இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப்படம் உருவாகி வருகிறது. ரிலீசுக்கு முன்பாகவே இந்தப்படத்தின் சேட்டிலைட், ஆடியோ மற்றும் டிஜிட்டல் உரிமை பல கோடி ரூபாய்க்கு விற்று தீர்ந்துள்ளது. அத்துடன் பத்துக்கு மேற்பட்ட மொழிகளில் இந்தப்படம் உருவாகி வருகிறது.

சூர்யாவின் லேட்டஸ்ட் லுக்இந்தப்படத்தின் ‘கங்குவா’ என்ற டைட்டில் அண்மையில் மோஷன் போஸ்டருடன் அதிரடியாக வெளியானது. இந்நிலையில் இந்தப்படத்திற்காக சூர்யா வெறித்தனமாக தயாராகியுள்ள புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. ‘கங்குவா’ படப்பிடிப்பின் போது ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் தனது குடும்பத்தினருடன் சூர்யா, ஜோதிகாவை சந்தித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

சூர்யா ஜோடியான திஷா பதானிசூர்யா உடல் எடை அதிகரித்து வெறித்தனமான லுக்கில் இருக்கிறார். அவரின் லேட்டஸ்ட் தோற்றம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ‘கங்குவா’ படத்தில் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி ஹீரோயினாக நடிக்கிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் ‘கங்குவா’ படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.