கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ் – ஜேடிஎஸ் கூட்டணியா? டி.கே.சிவக்குமார் சொன்ன பதில்!

கர்நாடகாவில் தேர்தல் சண்டை பாஜக,
காங்கிரஸ்
இடையில் மட்டும் தானா? ஜேடிஎஸ்-ன் கிங் மேக்கர் கனவு என்னவாகும்? என்ற கேள்விக்கு வரும் 13ஆம் தேதி பதில் கிடைத்துவிடும். அதற்குள் வாக்கு செலுத்த வந்த காங்கிரஸ் தலைவர்களிடம் கேள்விக் கணைகள் பாய்ந்த வண்ணம் இருக்கின்றன. இதுதொடர்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவரும், கனகபுரா தொகுதி வேட்பாளருமான டி.கே.சிவக்குமார் பதிலளிக்கையில், எனக்கு 200 சதவீதம் நம்பிக்கை இருக்கிறது.

காங்கிரஸ் வெற்றி

காங்கிரஸ் கட்சி 141 இடங்களை கைப்பற்றி அபார வெற்றி பெறும். மதச்சார்பற்ற ஜனதா தளம் உடன் கூட்டணி வைக்க வேண்டிய அவசியமில்லை. தனிப் பெரும்பான்மை பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்தார். டி.கே.சிவக்குமார் மனைவி பேசும் போது, எனது கணவர் 100 சதவீதம் வெற்றி பெறுவார். காங்கிரஸ் ஆட்சி மீண்டு வரும்.

ஊழலற்ற கர்நாடகா

மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். முன்னதாக டி.கே.சிவக்குமார் தனது ட்விட்டரில், வாக்களிக்க மக்கள் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் உங்கள் வாக்கின் சக்தியை உணருங்கள். நமது மாநிலத்தின் எதிர்காலத்தை திருத்தி எழுத உறுதி எடுங்கள். ஊழலற்ற மாநிலத்தை கட்டமைக்க தவறாமல் வாக்களிக்க வேண்டும்.

கனகபுராவில் போட்டி

வலிமையான, பாதுகாப்பான கர்நாடகா வேண்டுமெனில் நான் செய்ததை போல நீங்களும் செய்ய வேண்டும் என்று கூறி வாக்களித்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். டி.கே.சிவக்குமார் கனகபுரா தொகுதியில் போட்டியிடுகிறார். இதே தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். இந்நிலையில் 4வது முறை வெற்றிக் கனியை பறிக்க களத்தில் இறங்கியிருக்கிறார்.

ஒக்கலிகா சமூகம்

டி.கே.சிவக்குமாரின் செல்வாக்கு காரணாமாக ’கனகபுரா ராக்’ என்ற செல்லப் பெயரும் உண்டு. இம்முறை டி.கே.சிவக்குமாருக்கு எதிராக பாஜக சார்பில் ஆர்.அசோகா நிறுத்தப்பட்டுள்ளார். இவர்கள் இருவருமே ஒக்கலிகா சமூகத்தை சேந்தவர்கள். இதனால் போட்டி பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒக்கலிகா என்றாலே மதச்சார்பற்ற ஜனதா தளம் தான் நினைவுக்கு வரும்.

ஜேடிஎஸ் வியூகம்

அந்த அளவிற்கு இந்த சமூக மக்களின் ஆதரவை தன்வசம் வைத்திருக்கின்றனர். இதை நம்பி நாகராஜூவை வேட்பாளரை நிறுத்தியுள்ளனர். இவர் மற்ற இரண்டு வேட்பாளர்களுக்கும் எந்த அளவிற்கு போட்டியாக இருப்பார்? தேர்தல் முடிவுகள் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படுமா? என்பதை வரும் 13ஆம் தேதி தெரிந்து கொள்ளலாம்.

யார் முதல்வர்?

காங்கிரஸ் வெற்றி பெற்றால் யார் முதல்வர் நாற்காலியில் அமருவார் என்ற கேள்விக்கு மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ராமலிங்க ரெட்டி பதிலளிக்கையில், 2, 3 பேர் லிஸ்டில் இருக்கின்றனர். கட்சி தலைமையும், எம்.எல்.ஏக்களும் சேர்ந்து அடுத்த முதல்வரை தேர்வு செய்வர் எனக் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.