‘’விடாமுயற்சி’’ கதையை அஜித் இன்னும் கேட்கவில்லை… வலைபேச்சு அந்தணன் கொடுத்த அப்டேட்!

சென்னை : விடாமுயற்சி படத்தின் கதையை அஜித் இன்னும் கேட்கவே இல்லை என்று வலைபேச்சு அந்தணன் பேட்டி கூறியுள்ளார்.

துணிவு திரைப்படம் வெளியானதில் இருந்து ரசிகர்கள் அஜித் 62 படத்தின் அப்டேட்டை கேட்டு வந்தனர்.

இதையடுத்து பிறந்த நாள் அன்று அஜித்தின் 62 படத்தின் தலைப்பை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

விடாமுயற்சி : அஜித்தின் படத்திற்கு வழக்கமாக ‘வி’ சென்டிமெண்ட் வொர்க் அவுட் ஆகும் என்பதால், இந்த படத்திற்கும் விடாமுயற்சி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்தபடத்தின் கதாநாயகி யார், வில்லன் யார், என்ன கதை, படப்பிடிப்பு எப்போது என அடுத்தடுத்த அப்டேட்டுகளை ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

உடல் எடை அதிகரிப்பு : இந்நிலையில் வலைப்பேச்சு அந்தணன் ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், அஜித் உடல் எடை அதிகரித்தது விடாமுயற்சி படத்திற்காகத்தான் என்ற பேச்சு எழுந்துள்ளது. அவர் படத்திற்காக உடல் எடையை அதிகரிக்கவில்லை. வேல்டு டூர் சென்றுள்ளதால், வழியில் கிடைக்கும் உணவை சாப்பிட்டுக்கொண்டே வருவதால் உடல் எடை அதிகரித்துள்ளார்.

அவருக்கு பெரியவிஷயம் இல்லை : மேலும், அவர் மே 8ந் தேதி சென்னைக்கு வந்துவிட்டார், படப்பிடிப்பிற்கு இன்னும் ஒரு மாதம் இருப்பதால், கதாபாத்திரத்திற்காக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று இயக்குநர் மகிழ் திருமேனி கேட்டுக்கொண்டால் நிச்சயம் குறைப்பார். அஜித் பல படங்களில் கேரக்டருக்காக உடல் எடையை குறைத்து இருக்கிறார் என்பதால், இது பெரிய விஷயம் இல்லை.

Valaipechu Anthanan talks about ajith kumars vidamuyarchi

கதையை அஜித் கேட்கவில்லை : விடாமுயற்சி என்ற பெயரைக் கேட்டதுமே இணையத்தில் பலவிதமான கதைகள் உலவி வருகிறது. உண்மையில் படத்தின் கதையை அஜித் இன்னும் கேட்கவே இல்லை. அஜித்திற்கு முழுமையான இரண்டரை மணிநேர கதையை சொல்லுவதற்கு மகிழ் திருமேனி காத்து இருக்கிறார். அனேகமாக இரண்டு ஒரு நாளில் அஜித் முழுகதையையும் கேட்டுவிடுவார். அதேபோல படத்தின் கதையை பொருத்துத்தான் படப்பிடிப்பு எத்தனை நாளைக்கு நடக்கும் என்பதை சொல்ல முடியும் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.