வேளாண் படிப்புகள் – ஜூன் 9 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளமறிவியல் பாடப்பிரிவுகளுக்கு இன்று முதல் ஜூன் 9-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என துணைவேந்தர் கீதாலட்சுமி தெரிவித்துள்ளார். வேளாண் மற்றும் மீன்வள படிப்பு உள்ளிட்ட 12 இளமறிவியல் பாடப்பிரிவுகளில் சேர http://tnau.ucanapply.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். வேளாண் பல்கலை கீழ், 18 உறுப்பு கல்லூரிகளும், 28 இணைப்பு கல்லூரிகளும் உள்ளன. பொதுப்பிரிவு விண்ணப்ப கட்டணம் ரூ.500 எனவும், பட்டியலினத்தவருக்கு கட்டணம் ரூ.250 என தெரிவிக்கப்ட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.