இந்திய கிரிக்கெட் அணிக்கான புதிய பயிற்சி ஜெர்சி வெளியீடு

இந்திய அணியின் கிட் ஸ்பான்சராக 2016-ல் இருந்து 2020 வரை நைக் நிறுவனம் இருந்தது. அதைத்தொடர்ந்து 2020-ல் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் கிட் ஸ்பான்சராக இருந்துவந்த எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிந்தது.

இந்திய அணியின் மெயின் ஸ்பான்சராக பைஜூஸ்நிறுவனம் இருந்து வருகிறது. இந்நிலையில், புதிய கிட் ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவனத்துடன் பிசிசிஐ ஒப்பந்தம் செய்துள்ளது. வரும் ஜூன் 7-ம் தேதி தொடங்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இருந்து அடிடாஸ் நிறுவனத்தின் ஒப்பந்தம் தொடங்குகிறது.

இந்த நிலையில் அடிடாஸ் நிறுவனம் தயாரித்த இந்திய அணியின் புதிய ஜெர்சி வெளியிடப்பட்டுள்ளது. புதிய பயிற்சி ஜெர்சியை வீரர்கள் , பயிற்சியாளர்கள் அணிந்து இருக்கும் புகைப்படத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.