பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 84ஆவது வருடாந்த பட்டமளிப்பு விழா

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 84ஆவது வருடாந்த பட்டமளிப்பு விழா 24 மற்றும் 25ஆம் திகதிகளில் பல்கலைக்கழகத்தின் திறந்த மைதானத்தில் இடம்பெறுகிறது.

மூன்று அமர்வுகளில் இடம்பெறும் இந்நிகழ்வில் 2500 இளமாணிப் பட்டம், 1286 பட்டப்பின் படிப்பு மற்றும் 03 விசேட பட்டங்களும் வழங்கப்படவுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார்.

இந்நிகழ்வு நேற்று (24) முற்பகல் மற்றும் பிற்பகல் என இரண்டு அமர்வுகளில் இடம்பெற்றதுடன், இன்று (25) முற்பகல் ஒரு அமர்வுமாகவும் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. இன்று மூன்றாவது அமர்வின் போது பேராசிரியர் சன்ன ரத்னதுங்க, பேராசிரியர் சி. பி. திசாநாயக மற்றும் கலாநிதி பாலித கொஹொன ஆகியோருக்கான விசேட கௌரவ விருதுகள் வழங்கப்படவுள்ளன.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.