மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: இந்திய வீரர் ஸ்ரீகாந்த் காலிறுதி சுற்றுக்கு தகுதி..!

கோலாலம்பூர்,

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீ காந்த் கிடாம்பி , தாய்லாந்து வீரர் குன்லவுட் விடிசார்ன் ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 21- 19 , 21-19 என்ற செட் கணக்கில் இந்திய வீரர் ஸ்ரீ காந்த் கிடாம்பி வெற்றி பெற்றார். இதனால் அவர் காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.