ஆஷிஷ் வித்யார்த்தியின் இரண்டாம் திருமணம்: வைரலாகும் முதல் மனைவியின் பதிவு.!

தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து கலக்கியவர் ஆஷிஷ் வித்யார்த்தி. 60 வயதான இவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட தகவல் நேற்றைய தினம் வெளியாகி சோஷியல் மீடியா முழுக்க பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில் ஆஷிஷ் வித்யார்த்தி முன்னாள் மனைவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
‘கில்லி’ படத்தில் விஜய்யின் அப்பாவாக நடித்தவர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் 11 மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ரஜினியுடன் இணைந்து பாபா, விஜய்யுடன் கில்லி, தனுஷுடன் மாப்பிள்ளை மற்றும் உத்தமபுத்திரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் பல படங்களில் நடித்து பிரபலமாகியுள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

ஆஷிஷ் வித்யார்த்தி ராஜோஷி பருவா என்பவரை முதலாவதாக திருமணம் செய்து கொண்டார். இவர் நடிகர், பாடகர் மற்றும் நாடக கலைஞராக இருப்பவர். அத்துடன் பழம்பெரும் நடிகையான சகுந்தலா பருவாவின் மகள். இந்நிலையில் ஆஷிஷ் வித்யார்த்தி கவுகாத்தியை சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் ஆஷிஷ் வித்யார்த்தி பதிவுத் திருமணம் செய்துள்ளார். இவர்களின் திருமணம் தொடர்பான புகைப்படங்கள் நேற்றைய தினம் சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. பலரும் இவர்களின் திருமணத்திற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

‘விடாமுயற்சி’ படத்துக்காக வெறித்தனமாக ரெடியாகும் ஏகே: தீயாய் பரவும் லேட்டஸ்ட் லுக்.!

இந்நிலையில் ஆஷிஷ் வித்யார்த்தியின் முதல் மனைவி ராஜோஷி பருவா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது பகிர்ந்துள்ள பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில், ‘ஒரு சரியான நபர் நீங்க என்ன செய்கிறீர்கள் என்ற கேள்வியை கேட்க மாட்டார். அதே போல் உங்கள் மனம் புண்படும்படியும் நடந்து கொள்ள மாட்டார். அதை நினைவின் வைத்துக்கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார்.

அதே போல் தன்னுடைய மற்றொரு பதிவில், அதிக சிந்தனையும் சந்தேகமும் உங்கள் மனதில் இருந்து நீங்கட்டும். அமைதி உங்கள் வாழ்க்கையை தெளிவாக்கட்டும். நீண்ட காலமாக நீங்கள் வலிமையானவராக இருக்கிறீர்கள். உங்கள் ஆசீர்வாதங்களை பெறுவதற்கு சரியான நேரம் இது. நீங்கள் இதற்கு தகுதியாவானவர் தான் என பதிவிட்டிருக்கிறார். அவரின் இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Kazhuvethi Moorkkan: ‘கழுவேத்தி மூர்க்கன்’ படம் எப்படி இருக்கு.?: முழு விமர்சனம் இதோ.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.