கவினின் புதிய படம் அறிவிப்பு : அனிருத் இசையமைக்கிறார்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர் கவின். சில மாதங்களுக்கு முன் அவர் நடித்து வெளிவந்த டாடா திரைப்படம் மிகப் பெரிய வெற்றி படமாக மாறியது. இதை தொடர்ந்து அவர் பிரபல நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கிறார் என தகவல் பரவியது. இந்த நிலையில் இன்று(மே 26) இந்த படம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கவினின் நான்காவது படத்தை நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக அயோத்தி படத்தின் மூலம் பிரபலமான பிரீத்தி அன்சாரி நடிக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இன்று இந்த படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. இந்த பூஜையில் இயக்குனர் மிஷ்கின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விரைவில் இப்படத்தின் தலைப்பை விரைவில் அறிவிப்போம் என்று தெரிவித்துள்ளனர். இளைஞர்களைக் கவரும் வகையில் இன்றைய தலைமுறையின் கதையைச் சொல்லும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகவுள்ளது.