திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் நாடாளுமன்ற புதிய கட்டிடம்..!

புதிய நாடாளுமன்ற கட்டடம் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.

65 ஆயிரம் சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடத்தை வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்கவுள்ளார். முக்கோண வடிவில் 4 தளங்களில் வடிவமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடத்தின் உட்புற அமைப்பு, தாமரை, மயில் மற்றும் ஆலமரம் உள்ளிட்ட தேசிய சின்னங்களை கருவாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

ஞானம், சக்தி, கர்மா ஆகிய மூன்று வாயில்களை கொண்ட நாடாளுமன்ற கட்டடத்தில், இரு அவைகள் மட்டுமின்றி எம்பிக்களுக்கான ஓய்வறைகள், நூலகம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

மக்களவையில் 888 இருக்கைகளும், மாநிலங்களவையில் 384 இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.