பல் இழிக்கும் பாஜக மாடல்.. குஜராத் பொதுத் தேர்வு முடிவுகளில் அம்பலம்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்.!

பாஜக ஆளும் குஜராத் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது.

நாடு சமநிலையில் கல்வி அறிவில் மேம்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தேசிய கல்வி கொள்கை கொண்டு வரப்பட்டதாக ஒன்றிய பாஜக அரசு கூறியது. ஆனால் தேசிய கல்வி கொள்கையில் பண்டைய கால பிற்போக்குத்தனமான குலக் கல்வி முறையை மறைமுகமாக திணிப்பதாக தமிழ்நாடு எதிர்த்தது. அதேபோல் கல்வியில் வளர்ச்சி பற்றி எங்களிடம் கூற வேண்டாம், பாஜக ஆளும் குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு முன்னேறி இருப்பதாகவும் இங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர்.

ஆனால் தாய்மொழி வழிக்கல்வியை ஊக்குவிப்பது உள்ளிட்ட அடுத்த நூற்றாண்டுக்கு மாணவர்களை தயார்படுத்தும் அம்சங்கள் தேசிய கல்வி கொள்கையில் உள்ளது. ஆனால் அரசியல் ஆதாயங்களுக்காக சிலர் இதை எதிர்க்கின்றனர் என பாஜக அமைச்சர் தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுத்த
திமுக
, பாஜக அரசாளும் குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை காட்டிலும் உள்கட்டமைப்பு, கல்வியின் தரம் உள்ளிட்ட சிறப்பு மேம்பாட்டு திட்டங்கள் ஏற்கனவே தமிழகத்தில் உள்ளது. முன்னேறிய மாநிலமான தமிழகத்திற்கு பாஜகவின் தேசிய கல்விக் கொள்கை தேவை இல்லை என திமுக எதிர்வாதம் வைத்தது.

இந்தநிலையில் தான் பாஜக ஆளும் குஜராத் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களின் பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. மத்திய பிரதேசத்தில் 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. அதில் 12ம் வகுப்பில் மாநிலத்தில் மொத்தம் தேர்வு எழுதிய 7 லட்சத்து 26 ஆயிரம் மாணவர்களில், 3 லட்சத்து 24 ஆயிரம் மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். தேர்வு எழுதியவர்களில் 45%, அதாவது கிட்டத்தட்ட பாதி மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளார்கள்.

அதேநிலை தான் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளிலும் இருந்தது. 10ம் வகுப்பு தேர்வு எழுதிய 8 லட்சத்து 15 ஆயிரத்து 364 மாணவர்களில் கிட்டத்தட்ட 3 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். தோல்வி விழுக்காடு 37 சதவிகிதமாக பதிவாகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் 1 ஆண்டு தவிர மீதமுள்ள 19 ஆண்டுகளும் மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சிதான் நடந்து வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

அதேபோல் பாஜக ஆளும் குஜராத் மாநில பொதுத் தேர்வு முடிவுகளும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. குஜராத்தில் இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 2 லட்சத்து 60 ஆயிரம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். அதாவது 35.38% தோல்வி விழுக்காடு. மேலும் குஜராத்தி மொழிப்பாடத்தில் மட்டும் 1 லட்சத்து 7 ஆயிரம் மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர். குஜராத்துடன் ஒப்பிட்டால் தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் 91.39% ஆக உள்ளது. ஆனால் குஜராத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் 64.62% ஆகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.