மிஸ் ஆன கல்லூரிக் கட்டணம்! தவறவிட்ட தாய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்!

தமிழகத்தில் ஆட்டோ காரர்கள் என்றாலே தனி மதிப்பு தான். அப்படியான ஒரு நேர்மையான ஓட்டுனர் தேவகோட்டையின் ஹீரோவாகி உள்ளார்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் தனது மகன் கல்லூரி கட்டணம் ரூ.62,000-யை தவறவிட்டு தாய் தவித்த நிலையில், அதை எடுத்துக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர் கண்ணனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

புதுக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த வள்ளிமயில் (வயது 40), தனது மகனின் கலோரி கட்டணத்திற்காக ரூ.62,000-யை வங்கியில் செலுத்த இன்று தேவகோட்டையில் உள்ள வங்கிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். ஆனால், அவர் எடுத்துவந்த பண பை காணவில்லை. 

வரும் வழியில் ஆவரங்காட்டு கிராமம் அருகே அந்த பண பை வகவனத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ ஓட்டுநர் கண்ணன் கீழே கிடந்த அந்த பணப் பையை தேவகோட்டை நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

இதனையடுத்து, பையில் இருந்த ஆவணங்கள் கொண்டு, முகவரியில் வள்ளிமயிலை தொடர்பு கொண்ட போலீசார், அவரை காவல் நிலையத்துக்கு வரவழைத்தனர்.

பின்னர், ஆட்டோ ஓட்டுநர் முன்னிலையில் அந்த பணத்தை வள்ளிமயிலை இடம் போலீசார் ஒப்படைத்தனர். மேலும் ஆட்டோ ஓட்டுநரின் இந்தச் செயலை பாராட்டி, அவருக்கு சால்வை அணிவித்து போலீசார் கவுரவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.