Viduthalai 2 Exclusive update – விடுதலை 2 ஷூட்டிங்.. எக்ஸ்க்ளூசிவ் அப்டேட் கொடுத்த மூணார் ரமேஷ்

சென்னை: Viduthalai 2 Exclusive update (விடுதலை 2 எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்) விடுதலை படத்தின் இரண்டாம் பாக ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்து எக்ஸ்க்ளூசிவ் அப்டேட்டை தமிழ் பில்மிபீட்டுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் மூணார் ரமேஷ் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான வெற்றிமாறன் நடிகர் விஜய் சேதுபதி, சூரி உள்ளிட்டோரை வைத்து விடுதலை படத்தை இயக்கியிருந்தார் . நக்சல் பாரி இயக்கங்கள் குறித்தும் தமிழரசன் மற்றும் புலவர் கலியபெருமாள் குறித்தும் படத்தில் பேசப்பட்டிருந்தது.. இப்படம் மொத்தம் இரண்டு பாகங்களாக உருவானது. இதன் முதல் பாகம் கடந்த மார்ச் 31ஆம் தேதி ரிலீஸானது. விஜய் சேதுபதி, சூரி தவிர்த்து கௌதம் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

ரசிகர்கள் கொண்டாடிய விடுதலை:

தனது படைப்புகள் மூலம் ஆரோக்கியமான உரையாடலை சமூகத்தில் கிளப்புபவர் வெற்றிமாறன். வெக்கை நாவலில் இருந்து அசுரன் உருவானாலும் அந்தப் படத்தின் மூலம் பஞ்சமி நிலம் குறித்த உரையாடலை தொடங்கிவைத்தார். அதேபோல்தான் விடுதலை படத்தின் மூலம் காவல் துறையின் கோர முகத்தை இன்னொரு முறை வெளிச்சப்படுத்தியிருக்கிறார் வெற்றி என்ற கருத்து எழுந்தது. படத்தை ரசிகர்கள் ஏகத்துக்கும் கொண்டாடினர்.

விமர்சனத்தை சந்தித்த விடுதலை:

அதேசமயம் படத்தின் சில காட்சிகளில் வெற்றிமாறனின் வீரியம் இல்லை. குறிப்பாக நிர்வாண காட்சியை காண்பித்துவிட்டால் ரசிகர்கள் சோகமடைந்துவிடுவார்கள் என்ற ஒரு டெம்ப்ளேட்டுக்குள் அவர் சிக்கிவிடுவாரோ என்ற எண்ணம் விடுதலை படத்தை பார்த்தபோது எழுந்ததை தடுக்க முடியவில்லை எனவும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வெளிப்படையாக கூறவும் செய்தனர்.

இளையராஜா இசை:

இதற்கிடையே விடுதலையில் முதல்முறையாக இளையராஜாவுடன் இணைந்து பணியாற்றியிருந்தார் வெற்றிமாறன். இதன் காரணமாக இளையராஜா எப்படிப்பட்ட இசையை கொடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்தது. படத்தை பார்த்த ரசிகர்கள் இளையராஜாவின் இசை மெய் சிலிர்க்க வைப்பதாகவும், படத்தின் பாடல்களும் தாலாட்டும் உணர்வை கொடுப்பதாகவும் ரசிகர்கள் தெரிவித்தனர். ஆனால் சில இடங்களில் அவர் தேவையில்லாத இசையை கொடுத்திருக்கிறார் என்ற விமர்சனமும் எழுந்தது.

Here is the exclusive update about viduthalai Movie second part Shooting

கவனம் ஈர்த்த சூரி:

நகைச்சுவை நடிகராக வலம் வந்த சூரியை அந்தப் படத்தின் மூலமாக கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தினார் வெற்றிமாறன். அதற்கு நியாயம் செய்யும் விதமாக சூரியும் குமரேசன் என்ற கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்திருந்தார். நடிப்போடு மட்டுமின்றி ஆக்‌ஷன் காட்சிகளிலும் மிகப்பெரிய ரிஸ்க்கை அவர் எடுத்திருந்தார்.

இரண்டாம் பாகம்:

இதற்கிடையே விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் சில மாதங்களில் ரிலீஸ் ஆகும் என கருதப்பட்டது. ஆனால் படத்தின் சில காட்சிகளை வெற்றிமாறன் ரீ ஷூட் செய்யவிருப்பதாகவும் இதன் காரணமாக டிசம்பர் மாதம்தான் விடுதலை 2 ரிலீஸாகும் என சமீபத்தில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

மூணார் ரமேஷ் பேட்டி:

இந்நிலையில் விடுதலை படத்தின் முதல் பாகத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மூணார் ரமேஷ் தமிழ் பில்மிபீட்டுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது விடுதலை 2 குறித்து பேசிய அவர், “விடுதலை 2வுக்கான ஷூட்டிங்கை ஏற்கனவே வெற்றிமாறன் பெரும்பாலும் முடித்துவிட்டார். இருப்பினும் சில காட்சிகளை பிறகு ஷூட் செய்துகொள்ளலாம் என்று பாக்கி வைத்திருந்தார். அதற்கான ஷூட்டிங்கை ஜூன் 5ஆம் தேதிக்கு மேல் தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது.” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.