அச்சு அசலாக அம்மாவை உரித்து வைத்திருக்கும் நடிகை ரம்பாவின் மகள்: ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!

நடிகர் பார்த்திபன் சொல்லும் ‘சார் ரம்பா சார்’ என்ற வசனத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. தென்னிந்திய சினிமாவில் 90 களில் பிரபலமான நடிகையாக திகழ்ந்த ரம்பாவிற்கு இப்போதும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் தன்னுடைய மூத்த மகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
‘உழவன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரம்பா. அதனை தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். ரஜினி, கமல் என உச்ச நட்சத்திரங்களின் படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் பெங்காலி, போஜ்புரி உள்ளிட்ட பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் நடிகை ரம்பா கடந்த 2010 ஆம் ஆண்டு கனடாவை சார்ந்த இலங்கை தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவர் திருமணம் செய்து கொண்டார். கல்யாணத்திற்கு பின்பு ‘மானாட மயிலாட’ மற்றும் தெலுங்கு நடன நிகழ்ச்சி உட்பட சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக கலந்துக்கொண்டார்.

இதனையடுத்து தற்போது குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் ரம்பா. இவருக்கு லான்யா, சாஷா, ஷிவின் என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது தம்முடைய சோஷியல் மீடியா பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.

Theera Kaadhal: ஜெய் – ஐஸ்வர்யா ராஜேஷுக்கு வெற்றி கொடுத்ததா.?: ‘தீராக் காதல்’ பட விமர்சனம்.!

இந்நிலையில் நடிகை ரம்பாவின் மகள் லான்யா மேடையில் பாட்டு பாடி பரிசு வென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ரம்பா. அதில் அவரது மகள் டிரடிஷனல் உடை, கண்ணாடி, இரட்டை ஜடை, மல்லிகை பூ என பார்ப்பதற்கு அப்படியே அச்சு அசலாக ரம்பாவை உரித்து வைத்துள்ளார்.

Kavin: அனிருத், அயோத்தி பட ஹீரோயின்: தரமான கூட்டணியுடன் களமிறங்கும் கவின்.!

ரம்பா பகிர்ந்துள்ள இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனைப்பார்த்த ரசிகர்கள் ஜுனியர் ரம்பா, நினைத்தேன் வந்தாய் படத்தில் உங்களை பார்ப்பதை போல் உள்ளது. ரம்பாவின் ஜெராக்ஸ் என விதவிதமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.

View this post on InstagramA post shared by Rambha💕 (@rambhaindran_)

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.