சலார் படப்பிடிப்பை நிறைவு செய்த ஸ்ரேயா ரெட்டி

தமிழில் விஷால் நடித்த திமிரு படத்தில் மிரட்டலான வில்லி கதாபாத்திரத்தில் நடித்து ஒரே படத்தில் பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. அதை தொடர்ந்து விஷாலின் அண்ணனை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலான இவர் தற்போது செலெக்ட்டிவான படங்களில் மட்டும் நடித்து வருகிறார். அந்த வகையில் கேஜிஎப் படத்தை தொடர்ந்து பிரபாஸ் நடிப்பில் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வரும் சலார் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் ஸ்ரேயா ரெட்டி. இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சமீபத்தில் படமாக்கப்பட்டு நிறைவு பெற்றன.

இதனை தொடர்ந்து படக்குழுவினரிடம் இருந்து விடைபெற்ற ஸ்ரேயா ரெட்டி இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து கூறும்போது, “இயக்குனர் பிரசாந்த் நீல் என் கதாபாத்திரத்தை தனக்குள்ளேயே காட்சிப்படுத்தி இதை நான் செய்வேன் என உறுதியாக நம்பினார். இந்த கதாபாத்திரத்தை அவ்வளவு பெர்பெக்சனுடன் டீடைலாக அவர் உருவகப்படுத்தியுள்ளார். நான் சினிமா வட்டதை விட்டு விலகி இருப்பவள் என்று தெரிந்தும் என் திறமையை நம்பிய அவர் இதற்காக என்னை தேர்வு செய்தார். என்னுடைய எல்லைகள் என்ன என்பதை தாண்டி என்னை பயணிக்கச் செய்து, நேற்று இருந்ததை விட இன்று என்னை இன்னும் சிறப்பாக உணர வைத்திருக்கிறார். அதற்கு நன்றி” என்று கூறியுள்ளார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.