எனக்கு எங்கேஜ்மென்ட் ஆயிடுச்சு…அனுபமா பரமேஸ்வரன் சொன்ன குட் நியூஸ்.. சோகத்தில் ரசிகர்கள் !

சென்னை : அழகான க்யூட் நடிகையான அனுபமா பரமேஸ்வரன் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளார்.

மலையாள நடிகையான அனுபமா பரமேஸ்வரன், மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த பிரேமம் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

மூன்று கதாநாகிகளில் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்களின் ஆதரவை பெற்றார்.

நடிகை அனுபமா பரமேஸ்வரன் :

முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனுபமா தமிழில் கொடி படத்தில் நடித்திருந்தார். மலையாள படங்களில் பிஸி ஆகா நடித்து கொண்டிருந்த அனுபமா தமிழ் மொழியில் படங்கள் எதிலும் நடிக்கவில்லை. தெலுங்கு சினிமாவில் அனுபமாவிற்கு நல்ல மார்க்கெட் இருந்ததால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார்.

முத்தக்காட்சி :

ஹர்ஷா கோனுகாண்டி இயக்கத்தில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் இணைந்து ரௌடி பாய்ஸ் என்ற படத்தில் மருத்துவக்கல்லூரி மாணவியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். இந்த படத்தில், அனுபமா பரமேஸ்வரன் ஆஷிஷ் ரெட்டியுடன் மிகவும் நெருங்கமாக லிப்லாக் காட்சியில் தாராளம் காட்டி நடித்திருந்தார். இந்த படத்திற்காக 50 லட்சம் சம்பளம் வாங்கினார்.

actress anupama parameswaran Shared engagement photo

எனக்கு எங்கேஜ்மென்ட் ஆயிடுச்சு :

இணையத்தில் படு ஆக்டிவாக இருக்கும் அனுபமா பரமேஸ்வரன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனக்கு திருமணம் நிச்சயமாகி விட்டதாக பதிவிட்டு, கையில் பிளாஸ்டிக் கவரை மோதிரம் போல் செய்து அணிந்துகொண்டு, தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக அனுபமா பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் விளையாட்டுக்கு ஓர் அளவு இல்லை என கேட்டு வருகின்றனர்.

காதல் கிசுகிசு :

நடிகை அனுபமா, இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாகவும் பரவலாக பேசப்பட்டது. பின்னர் தனது காதலி சஞ்சனாவை பும்ரா திருமணம் செய்துகொண்தை அடுத்து, அனுபமாவின் காதல் சர்ச்சை முடிவுக்கு வந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.