நான் ஆண்களுக்கு எதிரானவள் அல்ல : ஐஸ்வர்யா ராஜேஷ்

சென்னையில் நேற்று நடந்த புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது : 17 வயதில் திருமணமாகி, 20 வயதில் விவாகரத்து, 2 குழந்தைகளை வைத்துக் கொண்டு ஒரு பெண் இத்தனை உயரத்திற்கு செல்ல முடியுமா என்று சிந்தித்த போது, எனக்கு என் தாய் தான் நினைவுக்கு வந்தார்.

சினிமாவுக்கு நான் வந்த ஆரம்ப கட்டத்தில், “நீயெல்லாம் என்ன செய்ய போகிறாய்” என்று பலரும் குறை சொல்லி வந்தார்கள். ஆனால், அதையெல்லாம் கடந்து வந்ததற்கு நாங்கள் நிற்காமல் ஓடிக் கொண்டிருந்ததுதான் காரணம். நான் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிப்பதால் எனக்கு ஆண்கள் பிடிக்காது என நினைத்து கொள்ள வேண்டாம். என்னை பெண்ணியவாதியா என்று கூட கேட்டார்கள் அதெல்லாம் கிடையாது. ஆண்களிலும் தவதறானவர்கள் உள்ளனர் பெண்களிலும் தவறானவர்கள் உள்ளனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.