மகளாக நடித்த நடிகையுடன் அடுத்த மாதம் திருமணமா? அதுக்குத்தான் அந்த அவசரமா? பரபரக்கும் திரையுலகம்!

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் தன்னுடைய மகளாக நடித்த நடிகையையே அடுத்த மாதம் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

வயதான அந்த பாலிவுட் நடிகர் ஏற்கனவே இருமுறை திருமணம் செய்து விட்டு விவாகரத்து செய்துக் கொண்டதே பெரும் சர்ச்சையை கிளப்பியது.

அவரது விவாகரத்து சமயத்திலேயே அந்த நடிகைக்காகத் தான் விவாகரத்து செய்தார் என பேச்சுக்கள் கிளம்பின.

மனைவிகளை தாண்டி நடிகைகளுடனும்: பிரபல நடிகராக வலம் வந்த அந்த பாலிவுட் நடிகர் பெண்களை திருமணம் செய்து கொள்வதும், பின்னர் விவாகரத்து செய்வதையுமே வழக்கமாக கொண்டுள்ளார் என அவர் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

மேலும், மனைவிகளை தாண்டி நடிகைகள் பலருடனும் உறவு வைத்திருந்தார் அந்த நடிகர் என்றும் அந்த பிரியமான நடிகை உள்ளிட்ட பல நடிகைகளுக்கு காதல் வலை வீசி காரியத்தை சாதித்துக் கொண்டார் என்றும் ஏகப்பட்ட பேச்சுக்கள் நடிகர் பற்றி கசிந்து வருகின்றன.

மகளாக நடித்த நடிகையுடன் காதல்:

கொடுமையின் உச்சமாக சினிமாவில் தன்னுடைய மகளாக நடித்த அந்த நடிகையின் அழகில் மயங்கி அவர் மீது காதல் கொண்டுள்ளார் அந்த நடிகர் என பெரிய பூகம்பமே வெடித்தது.

அதற்கு காரணமே தனியாக சில முறை அந்த நடிகையுடன் தனி ஹோட்டலில் நடிகர் ரூம் போட்டுத் தங்கியது தான் என்கின்றனர். இந்த விவகாரம் இரண்டாம் மனைவிக்கு தெரிய வந்த நிலையில், ஏற்பட்ட வாக்குவாதம் கடைசியில் விவாகரத்தில் வந்து முடிந்தது என்கின்றனர்.

அடுத்த மாதம் திருமணம்:

மனைவியை விவாகரத்து செய்த கையோடு நடிகர் அந்த இளம் நடிகையை திருமணம் செய்துக் கொண்டால் ரசிகர்கள் கூட மதிக்கமாட்டார்கள் என்று நினைத்து இதுவரை தனது உறவை ரகசியமாக வைத்து வந்த நடிகர், நடிகையின் டார்ச்சர் தாங்க முடியாமல் ஒரு வழியாக திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டார் என்கின்றனர்.

அதுவும், அடுத்த மாதத்திலேயே இருவரும் குடும்ப உறவினர்கள் மற்றும் நண்பர்கள் சூழ திருமணத்தையே ரகசியமாக நடத்தவும் முடிவு செய்து விட்டதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன. இது வெறும் வதந்தியா? அல்லது உண்மையான தகவல் தானா என்பது அடுத்த மாதம் தெரிந்து விடும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.