விண்ணில் பாயும் ஜிஎஸ்எல்வி எப்12: என்னென்ன சிறப்பம்சங்கள்?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் (ISRO) ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, ‘ஜி.எஸ்.எல்.வி. எப்-12’ (GSLV F12) ராக்கெட்டை இன்று (மே 29) காலை 10.42 மணிக்கு விண்ணில் ஏவுகிறது.

இந்த ராக்கெட் 51.7 மீட்டர் உயரமும் 420 டன் உந்துவிசை எடையும் கொண்டது. ஜி.எஸ்.எல்.வி., வரிசையில் இது 15ஆவது ராக்கெட் ஆகும். இதில் 2 ஆயிரத்து 232 கிலோ எடை கொண்ட ‘என்.வி.எஸ்.-01’ என்ற வழிகாட்டி செயற்கைகோள், புவி ஒத்திசைவு பரிமாற்ற சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்படுகிறது.

செயற்கைகோளை உத்தேசித்துள்ள சுற்றுப்பாதைக்கு எடுத்துச்செல்ல அடுத்தடுத்த சுற்றுப்பாதையை உயர்த்தும் நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது. வாகனங்கள் வழிசெலுத்துவதற்கு திட்டமிடப்பட்ட இரண்டாவது தலைமுறை செயற்கைகோள்களில் முதன்மையானது.

எகிறும் எடப்பாடி கிராஃப்: போட்டிக்கு தயாராகாத ஓபிஎஸ், சசிகலா

அடுத்த தலைமுறைக்கான என்.வி.எஸ். வரிசை செயற்கைகோள்கள் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தகவல்களை தக்கவைத்து மேம்படுத்தும். தரை வழி போக்குவரத்து, நீர் வழி போக்குவரத்து, வான் வழி போக்குவரத்து போன்றவற்றில் வழிகாட்டி சேவைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படும்.

ஜிஎஸ்எல்வி எப்-12 இறுதி கட்டப்பணியான 27.30 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ நேற்று (மே 28) காலை 7.21 மணிக்கு தொடங்கியது.

மூன்று நிலைகளை கொண்ட இந்த ராக்கெட்டில் எரிபொருட்கள் நிரப்பப்பட்டு ஏவுதளத்தில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது. ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.