ஆர்யாவின் 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படம் எப்படி இருக்கு.?: முழு விமர்சனம் இதோ.!

ஆர்யா, முத்தையா முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ள படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’. இந்தப்படத்தின் டைட்டிலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பிய நிலையில் அண்மையில் வெளியான படத்தின் டிரெய்லரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்நிலையில் இன்று இந்தப்படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
அண்ணன் குழந்தைகளுடன் தனியாக வாழ்த்து வரும் சித்தி இத்னானியை சொத்துக்காக திருமணம் செய்து கொள்ள முயற்சிக்கின்றனர் உறவுக்காரர்கள். இதற்கு சம்மதிக்காத அவர் மதுரை சிறையில் இருக்கும் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்பவரை சந்திக்க செல்கிறார். ஆனால் இந்த சந்திப்பு நிகழாமல் போகிறது. இதனை தெரிந்து கொண்டு தன்னை தேடி வந்த பெண்ணை பார்க்க செல்கிறார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

அதன்பின்னர் என்ன ஆனது? காதர் பாட்சாவுக்கும், சித்தி இத்னானி இருவருக்கும் இடையேயான தொடர்பு என்ன? என்ற கேள்விகளுக்கு பதிலே ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் கதை. சமகால அரசியல் சூழலை வைத்து இந்து – முஸ்லீம் ஒற்றுமையை இந்தப்படத்தில் பேச முயற்சித்துள்ளார் முத்தையா. ‘மாட்ட வைச்சு அரசியல் பண்ற சோலி வைச்சுக்காத. ஜமாத்தும் சபையும் ஓண்ணாதான் இருக்கும். அதை மாத்த முடியாது’ போன்ற கூர்மையான வசனங்கள் கவனம் பெறுகின்றன.

ஆனால் ஒட்டுமொத்த படமாக பார்க்கும் போது, படம் முழுக்க அயற்சியை தரும் சண்டைக்காட்சிகள், உறவுமுறைகளை நியாபகம் வைத்துக்கொள்ள முடியாத அளவிற்கு படத்தில் உள்ள கேரக்டர்கள் பெரும் குறையாக உள்ளது. முத்தையா படங்களின் ஹீரோக்கள் செய்யும் அனைத்து வேலையையும் ஆர்யா இந்தப்படத்திலும் செய்துள்ளார்.

Karthi: ஜப்பானுக்கு பிறகு இணையும் எதிர்பாராத கூட்டணி: கார்த்தியின் அடுத்த சம்பவம்.!

பிரபு தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்துள்ளார். கதாநாயகி சித்தி இத்னானி முத்தையாவின் கிராமத்து சப்ஜெக்ட்டிற்கு சுத்தமாக ஒட்டவில்லை. அவரின் வசன உச்சரிப்பும் சரியாக பொருந்தவில்லை. ஆடுகளம் நரேன், கேஜிஎப் புகழ் அவினாஷ், மதுசூதனன் ராவ் என எக்கச்சக்கமான வில்லன்கள் இருந்தாலும் ‘டாணக்காரன் இயக்குனர் தமிழ் தனிக்கவனம் ஈர்க்கிறார்.

இரண்டாம் பாதி அளவிற்கு முதல் பாதியில் சண்டை காட்சிகளை குறைத்து கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம். மற்றபடி ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ என்ற டைட்டிலை தவிர படத்தில் புதிதாக ஒன்றும் இல்லாத்தால் இந்தப்படமும் முத்தையா சினிமாட்டிக் யூனிவர்ஸில் இணைந்துள்ளது.

Thangalaan: விக்ரம் ஜாலியா இருக்காரு: ‘தங்கலான்’ பட வேறலெவல் அப்டேட் கொடுத்த பா. ரஞ்சித்.!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.