உதவி எண்கள் அறிவிப்பு!
கிழக்கு ரயில்வே, மேற்கு வங்க அரசு, ஒடிசா அரசு, தெற்கு ரயில்வே ஆகியவை உதவி எண்களை அறிவித்துள்ளன.
Helpline numbers at Howrah: 033 – 26382217
Kharagpur: 8972073925, 9332392339
Balasore: 8249591559, 7978418322
Shalimar: 9903370746
Helpline at Chennai Central: 044- 25330952, 044-25330953 & 044-25354771
`விபத்தில் சிக்கியவர்களை மீட்க, ஒடிசாவுக்கு விரையுமாறு உத்தரவிட்டிருக்கிறேன்!’ – முதல்வர் ஸ்டாலின்
`உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்!’ – மத்திய ரயில்வே அமைச்சர்
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “இந்த எதிர்பாராத ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், பலத்த காயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு 50,000 ரூபாயும் இழப்பீடாக வழங்கப்படும்” என அறிவித்திருக்கிறார்.
“முதல் கவலை… உயிருடன் இருப்பவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பதுதான்!” – ஒடிசா முதல்வர்
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக முதல்வர் நவீன் பட்நாயக் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “நிலைமை குறித்து ஆய்வு செய்வதற்காக நாளை காலை நான் செல்லவிருக்கிறேன். தற்சமயம் எங்களுடைய முதல் கவலை என்னவென்றால், காயமடைந்து உயிருடன் இருப்பவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்ப்பதுதான். மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்தார்.
“சோகச் செய்தியால் வேதனையடைந்தேன்..!” – ராகுல் காந்தி
“ஒடிசா மாநிலம், பாலசோரில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளான சோகமான செய்தியால், வேதனை அடைந்தேன்…” என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
“மிகுந்த வேதனையடைகிறேன்..!” – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
“ஒடிசாவில் துரதிஷ்டவசமான ரயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குறித்து தகவலறிந்து ஆழ்ந்த வேதனையடைகிறேன். தங்கள் உறவுகளை இழந்தவர்களுடன் என்னுடைய இதயம் இருக்கிறது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.” – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ட்வீட்.
கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கொரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஒடிசாவின் புவனேஸ்வர் அருகே பஹாந்தா என்ற பகுதியில் வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இந்த விபத்தில் நான்கு பெட்டிகள் தடம் புரண்டிருக்கின்றன. இதற்கிடையே விபத்துக்குள்ளான ரயிலோடு மற்றுமொரு பாசஞ்சர் ரயிலும் மோதி விபத்துக்குள்ளாகியிருப்பதாக, ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா தெரிவித்திருக்கிறார்.
முதற்கட்டமாக 300-க்கும் அதிகமானோர் இந்தக் கோர விபத்தில் படுகாயமடைந்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. விபத்துக்குள்ளான ரயில்களிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஒடிசா மாநில மீட்புப்படை, தேசிய மீட்பு மற்றும் நிவாரணப்படைகள் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. 50-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் பணியில் ஈடுபட்டிருக்கின்றன. இரவு நேரத்தில், காட்டுப்பகுதியில் விபத்து நடந்திருப்பதால் மீட்கும் பணியில் சற்று சிரமம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதுவரை 132 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக ஒடிசா மாநில அரசு கூறியிருக்கிறது. உயிரிழப்பு குறித்து இதுவரை அரசு எந்தத் தகவலும் வெளியிடவில்லை. இதற்கிடையே, ஒடிசா முதல்வருடன் தமிழ்நாட்டின் முதல்வர் தொலைபேசியில் தொடர்புகொண்டு அங்கிருக்கும் சூழலைக் கேட்டறிந்திருக்கிறார். மேலும், தேவைப்படும் உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
மேலும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தலைமைச் செயலாளர் மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் தொடர்ந்து நிலைமையைக் கண்காணித்து வருவதாகத் தெரிவித்திருக்கிறார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் விபத்து நடந்த இடத்துக்குச் செல்லுமாறு வருவாய்த்துறை அமைச்சர் பிரமிளா மாலிக்கிடம் கூறியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த விபத்து குறித்துப் பேசிய ஒடிசா தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா,“NDRF மற்றும் SDRF குழுக்கள் சம்பவ இடத்தில் இருக்கின்றன. 600-700 மீட்புப்படை வீரர்கள் பணிபுரிகின்றனர். இரவு முழுவதும் மீட்புப்பணி நடைபெறும். அனைத்து மருத்துவமனைகளும் ஆதரவு அளித்து வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களை மீட்பதே எங்களின் உடனடி அக்கறை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்துள்ளனர்” என்றார்.
கிழக்கு ரயில்வே, மேற்கு வங்க அரசு, ஒடிசா அரசு, தெற்கு ரயில்வே ஆகியவை உதவி எண்களை அறிவித்துள்ளன.
Helpline numbers at Howrah: 033 – 26382217
Kharagpur: 8972073925, 9332392339
Balasore: 8249591559, 7978418322
Shalimar: 9903370746
Helpline at Chennai Central: 044- 25330952, 044-25330953 & 044-25354771