கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதியா.? சந்தேகத்தின் பேரில் 3 சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரணை..!

திருச்சி வாளாடியில் தண்டவாளங்களுக்கு இடையே லாரி டயர்கள் வைக்கப்பட்டிருந்த சம்பவம் தொடர்பாக, 3 சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில், திருச்சி வழியே சென்றுக் கொண்டிருந்த போது,  3 டயர்கள் தண்டவாளத்தில் கிடப்பதைக் கண்ட ஓட்டுநர், சாமர்த்தியமாக செயல்பட்டு ரயிலின் வேகத்தை குறைத்ததால் விபத்து தவிர்க்கப்பட்டது.

எனினும் ஒரு டயர் ரயில் இன்ஜினில் மாட்டியதால், மின் ஒயர் கேபிள்கள் துண்டாகி, 4 பெட்டிகளில் மின்விசிறி, மின் விளக்குகள் இயங்கவில்லை.

அப்பகுதியில் ரயில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறும் சூழலில் இச்சம்பவம் நடந்ததால் ரயிலை கவிழ்க்க சதி நடைபெற்றதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர்.

சந்தேகத்தின் அடிப்படையில்  3 சிறுவர்களை பிடித்து போலீசார் விசாரித்த நிலையில், அவர்களுக்கும் இந்த சதி செயலுக்கும் தொடர்பில்லை என்பது தெரியவந்துள்ளது.   

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.