உத்தேக ஒலிபரப்பு அதிகாரசபை சட்டத்தில் பாதகமாக ஏதேனும் இருந்தால் சுட்டிக்காட்டவும் – ஊடகத்தறை அமைச்சர்

இலத்திரனியல் ஒலிபரப்பு அதிகார சபை சட்டம் தொடர்பில் அமைச்சரவை உபகுழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பாக இரகசியம் ஏதும் இல்லை எனவும் அமைச்சரவைப் பேச்சாளரும், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

உத்தேச ஒலிபரப்பு அதிகாரசபைச் சட்டத்தில் எதிர்மறையாக ஏதேனும் இருந்தால், சுட்டிக்காட்டவும். எந்தத் துறையும் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பது நியாயமில்லை. இந்தத் துறையில் நீண்ட காலப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.