சென்னை: Rajkiran on Meena (மீனா குறித்து ராஜ்கிரண்) மீனா குறித்து நடிகர் ராஜ்கிரண் விழா மேடை ஒன்றில் ஓபனாக பேசினார். அதனை பார்த்த பலரும் ஆச்சரியத்தில் வாயடைத்து போயிருக்கின்றனர்.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா தமிழில் என் ராசாவின் மனசிலே படத்தில் நடித்ததன் மூலம் பரவலாக அறியப்பட்டார். அதில் அவர் ஏற்றிருந்த சோலையம்மா கதாபாத்திரம் ரசிகர்களை கவர அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. இதன் காரணமாக கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் ஃபேவரைட் ஹீரோயினாக வலம் வந்தார்.
இரு துருவங்களுடன்: தமிழ் சினிமாவின் இரண்டு துருவங்களாக கருதப்படும் ரஜினிகாந்த் மற்றும் கமல் ஹாசனுடன் பல படங்களில் சேர்ந்து நடித்திருக்கிறார் மீனா. குறிப்பாக ரஜினியுடன் அவர் நடித்த எஜமான், முத்து, வீரா போன்ற படங்கள் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகின. அதிலும் முத்து படத்தில் மீனாவுக்கும், ரஜினிக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் கோலிவுட்டின் மோஸ்ட் வாண்டட் ரீல் ஜோடியாக 90களில் வலம் வந்தனர் ரஜினியும், மீனாவும்.
90ஸ் கனவுக்கன்னி மீனா: ரஜினி, கமல் ஹாசனுடன் இணைந்து எப்படி நடித்தாரோ அதேபோல் அஜித் – விஜய் தலைமுறையில் அஜித்துடன் வில்லன், ஆனந்த பூங்காற்றே உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் விஜய்யுடன் ஒரு படத்தில்கூட ஜோடி சேரவில்லை. ஷாஜகான் படத்தில் இடம்பெற்ற சரக்கு வெச்சிருக்கேன் இறக்கி வெச்சிருக்கேன் பாடலுக்கு மட்டும் நடனமாடினார். அவர் நடிக்காவிட்டாலும் விஜய்யுடன் மீனாவின் மகள் நைனிகா தெறி படத்தில் நடித்துவிட்டார்.
மீனா 40 நிகழ்ச்சி: வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்ட மீனா அண்மையில் தனது கணவரை இழந்தார். இதனால் சில காலம் அமைதியாக இருந்த அவரை மற்றவர்கள் தேற்றினர். இதன் காரணமாக இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பிவருகிறார் மீனா. அந்தவகையில் அவருக்கு சமீபத்தில் தனியார் ஊடகம் சார்பாக மீனா 40 நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திரைத்துறையில் நுழைந்து 40 வருடங்கள் நிறைவு பெற்றதால் அவருக்கு இந்த நிகழ்ச்சி நடந்தது.

ராஜ்கிரண் பேச்சு: மீனா 40 நிகழ்ச்சியில் பேசிய ராஜ்கிரண், ” என் ராசாவின் மனசிலே படத்தில் மட்டும்தான் மீனா என்னை பார்த்து பயந்ததாக பலரும் நினைத்து கொண்டுள்ளனர். ஆனால் நிஜமாகவே மீனா என்னை பார்த்து வெகுவாக பயந்தார். படப்பிடிப்பு தொடங்கியது முதல் முடியும் வரை அவர் என்னிடம் பேசவே இல்லை. அதேபோல சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவர் மீனா. எந்த ஒரு சூழ்நிலையிலும் நடிக்க தயாராகிவிடுவார்.
மீனா ஆடை மாற்றும் முறை: அப்போதெல்லாம் கேரவன் போன்ற வண்டிகள் கிடையாது. படத்தின் ஷூட்டிங்கின்போது ஒரு முறை பாடலுக்காக ஆடையை மீனா மாற்ற வேண்டியிருந்தது. எதையும் யோசிக்காமல் மீனா உடனடியாக சாலையோரம் காரை நிறுத்தி அதன் மறைவில் நின்று ஆடையை மாற்றிக்கொண்டு வந்தார். இப்போது உள்ள நடிகைகளிடம் அதையெல்லாம் நாம் எதிர்பார்க்கவே முடியாது. அப்படி நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தவர்” என்றார்.