அடடா.. ஒடிசா ரயில் விபத்து இழப்பீட்டுக்காக இப்படியா? பெண் செய்த ‛காரியம்’.. கணவர் வைத்த செம ட்விஸ்ட்

புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த கோர விபத்தில் 280க்கும் அதிகமானவர்கள் பலியான நிலையில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் நிவாரண தொகைக்காக ஒடிசா பெண் போட்ட நாடகம் அவரது கணவரால் அம்பலமாகி உள்ளது. மேலும் இந்த சம்பவத்தை பார்க்கும்போது பணத்துக்காக இப்படியெல்லாமா செய்வார்கள்? என்ற கேள்வியும் கூடவே எழுகிறது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு கோரமண்டல் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கடந்த வெள்ளிக்கிழமை ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பாஹானகா என்ற இடத்தில் தடம்புரண்டது. சரக்கு ரயில் மீது மோதியதில் ரயில் தடம் புரண்டது.

இந்த ரயில் பெட்டிகள் பக்கத்தில் உள்ள டிராக்கில் விழுந்த நிலையில் இந்த சம்பவம் நடந்த அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த தண்டவாளத்தில் வந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் தடம்புரண்டது. இந்த ரயில் விபத்தில் 280க்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளன. மேலும் 700க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில் தான் ரயில் விபத்துக்கு மின்னணு இண்டர் லாக்கிங் சிஸ்டத்தால் ஏற்பட்ட மாற்றம் காரணமாக இருக்கலாம். விபத்துக்கான காரணத்தையும், அதற்கு காரணமானவர்களையும் கண்டுபிடித்துவிட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முன்னதாக ரயில் விபத்தில் இறந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டது. மத்திய ரயில்வே அமைச்சர், பிரதமர் மோடி மற்றும் ஒவ்வொரு மாநில முதல்வர்களும் தனித்தனியே நிவாரணம் அறிவித்தனர்.

மாநிலங்களை பொறுத்தமட்டில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் நிவாரணம் அறிவித்துள்ளனர். இந்நிலையில் தான் நிவாரணத்தை பெறுவதற்காக பெண் ஒருவர் நடத்திய நாடகம் போலீசார் மற்றும் அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. அவர் என்ன செய்தார்? என்பது பற்றிய விபரம் வருமாறு:

ஒடிசாவில் நடந்த ரயில் விபத்தில் அந்த மாநிலத்தை சேர்ந்த மக்களும் பலியாகி உள்ளனர். இந்த விபத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 39 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தான் பலியானவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் பலியானவர்களின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டம் மணியாபந்தா பகுதியை கீதாஞ்சலி தத்தா என்பவர் அரசு நிவாரணமான ரூ.5 லட்சத்தை பெற விரும்பினார். இதையடுத்து அவர் திட்டம் ஒன்றை தீட்டினார். அதன்படி தனது கணவர் விஜய் தத் இறந்ததாக கூறி நிவாரணம் முடிவு செய்தார். அதன்படி ஒடிசாவில் இறந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்ற கீதாஞ்சலி தத்தா ஒருவரின் உடலை சுட்டிக்காட்டி தனது கணவர் என அடையாளம் காட்டியுள்ளார்.

மேலும் பாலசோர் என்ஓசிசிஐ பகுதியை சேர்ந்த பயணி ஒருவரின் ஆதார் அட்டையை போலியாக வழங்கி அவரது பெயர் தான் தனது கணவரின் பெயர் எனக்கூறியுள்ளார். இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்ய தொடங்கினர். இதற்கிடையே தான் கீதாஞ்சலி தத்தாவின் கணவர் விஜய் தத்துக்கு இந்த விவகாரம் தெரியவந்தது. அதாவது தான் ரயில் விபத்து இறந்துவிட்டதாக கூறி இன்னொரு பயணியின் உடலை அடையாளம் காட்டி மனைவி நிவாரணம் பெற முயன்றதை அவர் அறிந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த விஜய் தத் மணியாபந்தா போலீஸ் நிலையம் சென்று தனது மனைவி கீதாஞ்சலி தத்தா மீது புகார் அளித்தார். அதில், ‛‛நான் உயிருடன் இருக்கிறேன். ஆனால் நான் ரயில் விபத்தில் இறந்ததாக இன்னொரு பயணியின் உடலை காட்டியும், போலி ஆவணங்கள் மூலமாகவும் என் மனைவி கீதாஞ்சலி தத்தா நிவாரணம் பெற முயன்றுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியுள்ளார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கினர். இதற்கிடையே கீதாஞ்சலி தத்தா தலைமறைவாகி உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.