பஸ்ல டிக்கெட் ரிசர்வ் பண்ணி போற நபரா நீங்க? உங்களுக்கான சூப்பர் அறிவிப்பு… இன்று முதல்!

அரசு பேருந்துகளில் முன்பதிவு சேவையை தமிழக அரசு விரிவுப்படுத்தியுள்ளது.

அரசுப் பேருந்துகள்தமிழ் நாடு அரசுப் பேருந்துகள் மூலம் நாள்தோறும் பல்லாயிரக் கணக்கான மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்து வருகின்றனர். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் இறப்பு சம்பந்தப்பட்ட துக்க நிகழ்வுகளுக்கும் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர். மேலும் கோவில், சுற்றுலாத்தலங்கள் என மாவட்டங்கள் விட்டு மாவட்டம் மற்றும் மாநிலங்கள் தாண்டியும் பயணம் செய்து வருகின்றனர்.​​
டிக்கெட் கட்டணம் குறைவுஇதேபோல் பண்டிகைக் காலங்களிலும் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர் மக்கள். வார இறுதி நாட்களில் சொந்த ஊர்களுக்கு செல்வதையும் பலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். தனியார் பேருந்துகளை காட்டிலும் அரசுப் பேருந்துகளில் கட்டணம் குறைவு என்பதால் சாமானிய மக்கள் பெரும்பாலும் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வதையே விரும்பி வருகின்றனர்.​​
முன்பதிவு சேவை விரிவாக்கம்இதனால் பண்டிகைக் காலங்கள் மற்றும் விடுமுறை நாட்களை தாண்டியும் தமிழக அரசு ஒவ்வொரு பகுதிக்கும் நூற்றுக்கணக்கான பேருந்துகளை இயக்கி வருகிறது. அவற்றை முன்பதிவு செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. இந்நிலையில் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு தமிழக அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது. அதாவது முன்பதிவு சேவையை விரிவாக்கம் செய்துள்ளது.​​
அமைச்சர் சிவசங்கர்இதனை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தனது அறிக்கையின் மூலம் அறிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தொலைதூரப் பயணிகளின் வசதிக்காக தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களுக்கு பேருந்துகளை இயக்கி வருகிறது. இதில் பயணிகளின் பாதுகாப்பிற்கும் மற்றும் வசதியான பயணத்திற்காகவும் ஒரு மாதத்திற்கு முன் இருக்கைகளை இணையதளம் மற்றும் கைபேசி மூலம் முன்பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.​​
விரிவுப்படுத்த முடிவுஇதன் மூலம் தினசரி சுமார் 60000 பயணிகளில் 20.000 பயணிகள் வரை முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர், இந்த வசதியினை அரசு பேருந்துகளில் 200 கி.மீ. தூரத்தில் பயணிக்கும் பயணிகளுக்காக விரிவுபடுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, சேலம் போன்ற முக்கிய நகரங்களில் இருந்து பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக முன்பதிவு சேவை விரிவுப்படுத்தப்படுகிறது என கூறியுள்ளார் அமைச்சர் சிவசங்கர்.​​
இருக்கைகள் அதிகரிக்கும்இதன்காரணமாக தற்போது ஒரு நாளைக்கான முன்பதிவு செய்து பயணிக்கும் வசதி 51.046 இருக்கைகளிலிருந்து 62,464 இருக்கைகள் வரை அதிகப்படுத்தி கூடுதல் பயணிகள் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள முக்கிய நகரங்களிலிருந்து இயக்கப்படும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை தவிர்த்து பிற தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளிலும் முன்பதிவு செய்து பயணிக்க இயலும் என்றும் தெரிவித்துள்ளார்.​​
முன்பதிவு தளங்கள்மேலும், பயணிகள் வழக்கமாக பயன்படுத்தும் முன்பதிவு தளமான tnstc.in மற்றும் tnstc mobile app மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் இந்த வசதி 07.06.2023 முதல் அதாவது இன்று முதல் நடைமுறைப்படுத்தபடவுள்ளது என்றும் அமைச்சர் சிவசங்கர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அமைச்சர் சிவசங்கரின் இந்த அறிவிப்பு அரசு பேருந்துகளில் தொலை தூர பயணம் செய்யும் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.​​

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.