எகிப்து: லாரி மீது வேன் மோதி விபத்து – 4 பெண்கள் பலி

கெய்ரோ,

எகிப்து நாட்டின் நிலி டெல்டா மாகாணம் ஹர்பியா நகரில் வேனில் 14 தொழிலாளர்கள் சென்றுகொண்டிருந்தனர். அப்போது சாலையில் எதிரே வந்த டிராக்டர் மீது வேன் அதிவேகமாக மோதியது.

இந்த கோர விபத்தில் வேனில் பயணித்த 4 பெண்கள் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்தனர். மோசமான சாலை, அதிவேகம் காரணமாக எகிப்தில் அதிக அளவில் விபத்துக்கள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.