கண்டி, நுவரெலிய மற்றும் பதுளை மாவட்டங்களை அண்மித்ததாக மென்டரின் தோடைச் செய்கை வலயம்

கண்டி, நுவரெலிய மற்றும் பதுளை மாவட்டங்களை அண்டியதாக மென்டரின் தோடைச் செய்கை வலயமொன்றை நிறுவுவதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

2023ஆம் வருட வரவு செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி புதிய பயிர் திட்டத்தை அரம்பிப்பதற்காக விவசாய அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டது.

தற்போது நாட்டில் தோடை உற்பத்திப ல மாவட்டங்களில் இடம்nறுவதுடன் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மென்டரின் இன தோடைக்கு பொது மக்களிடம் பாரிய கேள்வி காணப்படுகிறது.

இந்தத் தோடை இறக்குமதிக்காக வருடாந்தம் பாரிய அந்நியச் செலாவணி வெளிநாடுக்குச் செல்கின்றது. அறிக்கைகளுக்கு இணங்க 2022இல் தோடை இறக்குமதிக்காக அரசாங்கம் 496 மில்லியன் ரூபா நிதியை செலவிட்டுள்ளதுடன், 2407 மெற்றிக் தொன் தோடம்பழங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

ஆனால் 2022ஆம் ஆண்டிற்கு முன்னர் இதை விட பாரியளவில் தோடம்பழங்கள் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. அந்தவகையில் 7773மொற்றிக் தொன் தோடம்பழங்களின் இறக்கமதிக்காக 2019ஆம் ஆண்டில் 949 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.

அவ்வாறே 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் முறையே 670 மற்றும் 735 மில்லியன் ரூபா வீதம் செலவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் தேடைகளில் பெரும்பாலானவை மென்டரி;ன் இன தோடை வகைகளாகும். மென்டரின் இன தோடைளை விசேடமாக நமது நாட்டில் உற்பத்தி செய்தவற்காக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் சாதாகமான பதில் கிடைத்துள்ளது.

அதற்கிணங்க மத்திய மலை நாட்டிற்கு மேல் அமைந்துள்ள இடமல்லாத பதுளை, நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களின் கீழ்; அமைந்துள்ள பிரதேசங்களில் மென்டரின் தோடை இனத்தை உற்பத்தி செய்வதற்கு உகந்த காலநிலையுடன் பிரதேசமான அடையாளம் காணப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் ஆராய்ச்சி உத்தியோகத்தர் விபரித்தார்.

இக்கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய ஒவ்வொரு பயிரையும் வளர்ப்பதே அரசின் இலக்கு என சுட்டிக்காட்டினார். ஆதனால் மென்டரின் தோடை விசேடமாக நாட்டில் உற்பத்தி செய்வதற்காக அவசியமான நிதி ஒதுக்கீட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார்.

மென்டரின் தோடை உற்பத்தி தொடர்பான திட்ட அறிக்கை தற்போது முன்வைக்கப்பட்டுள்ளதுடன் இவ்வாண்டிற்குள் மென்டரின் உற்பத்தி வலயமாக கண்டி, நுவரெலிய மற்றும் பதுளை மாவட்டங்களை அண்மித்ததாக நிறுவுவதற்கு நடடிவடிக்கை எடுக்குமாறு விவசாயத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு ஆலோசனை விடுத்தார்.

தற்போது விவசாயத் திணைக்களத்திற்கு உரித்தான நாற்று மேடைகளில் மென்டரின் தோடைப் பயிர்கள் போதியளவில் பயிரிடப்பட்டுள்ளதால் அவற்றை பயிர்ச்செய்கைக்குப் பயன்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் விவசாய அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்க, விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மாலதி பரசுராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.