தேனி – 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை.!!
தேனி மாவட்டத்தில் உள்ள பழனிசெட்டி பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன். 73 வயதான இவர் கடந்த 2019-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த எட்டு மற்றும் ஆறு வயதுடைய சிறுமிகளுக்கு மிட்டாய் வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் படி போலீசார் விசாரணை நடத்தியதில் ஐயப்பன் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது உறுதியானது.
இதையடுத்து போலீசார் ஐயப்பனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
அதில், “பாலியல் தொல்லையில் ஈடுபட்ட முதியவர் ஐயப்பனுக்கு இருபது ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.