கணவரின் நடனத்தில் 36,000 குறைகளை கண்டுபிடிக்கும் கத்ரீனா கைப்

பாலிவுட்டில் கடந்த 20 வருடங்களாக தனக்கென ஒரு நிலையான இடத்தை தக்க வைத்துக்கொண்டு முன்னணி நடிகையாகவே வலம் வருபவர் நடிகை கத்ரீனா கைப். தற்போது கூட சல்மான்கான் நடித்துவரும் டைகர் 3 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். தான் காதலித்து வந்த பாலிவுட் நடிகர் விக்கி கவுசலை கடந்த 2021ல் திருமணம் செய்து கொண்டார் கத்ரீனா கைப். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கணவன் மனைவி இருவரும் ஜோடியாக கலந்து கொண்டனர்.

அப்போது விக்கி கவுசலிடம் உங்களது திரைப்படங்கள் குறித்து கத்ரீனா கைப் என்ன விதமான ஆலோசனைகள் சொல்லுவார் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த விக்கி கவுசல், “கதையில் பெரிதாக நானோ அவரோ தலையிட்டு கொள்ள மாட்டோம். ஆனால் என்னுடைய நடன ரிகர்சல் வீடியோக்களை என்னிடம் போட்டுக் காண்பித்து அதில் 36 ஆயிரம் குறைகளை சொல்லி அதை எல்லாம் சரி செய்து கொண்டு நடனம் ஆடுங்கள் என்று ஆலோசனை சொல்வார். அந்த அளவுக்கு நடனத்தில் பர்பெக்சன் பார்ப்பார்” என்று கூறியுள்ளார் விக்கி கவுசல்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.