கவனிங்க.. சென்னை புறநகர் ரயில்கள் 3 நாட்களுக்கு ரத்து.. தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு.. எந்தெந்த ரயில்கள்?

சென்னை:
சென்னை புறநகர் ரயில்கள் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. எந்தெந்த ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த விவரங்களை இங்கு காணலாம்.

சிக்னல் பராமரிப்பு காரணமாக மொத்தம் 15 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஜூன் 11 (ஞாயிற்றுக்கிழமை) முதல் 14-ம் தேதி வரை ஆவடி – பட்டாபிராம் மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் ரயில்கள், ஜூன் 11 – 14ஆம் தேதி வரை குறைக்கப்படுவதாகவும், அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் ரயில்கள் ஜூன் 12ஆம் தேதி வரை ரத்து செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, திருத்தணியில் இருந்து இயக்கப்படும் மின்சார ரயிலின் வழித்தடங்கள் ஜூன் 11 – 14ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ரத்து செய்யப்படும் ரயில்களின் எண்கள், வழித்தடங்கள், புறப்படும் நேரம், தேதி ஆகிய விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:

43127
எண் கொண்ட மூர் மார்க்கெட் – பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் ரயில் ரயில் ஜூன் 11 முதல் ஜூன் 13-ம் தேதி வரை செய்யப்படுகின்றன. வழக்கமான புறப்படும் நேரம்: இரவு 10. 35 மணி.

66007
எண் கொண்ட மூர் மார்க்கெட் – ஆவடி வரை செல்லும் ரயில் ஜூன் 11 – 13 வரை ரத்து செய்யப்படுகிறது. வழக்கமான புறப்படும் நேரம்: இரவு 11.30.

43892
எண் கொண்ட பட்டாபி மிலிட்டரி சைடிங் – மூர் மார்க்கெட் ரயில் ஜூன் 11 – 13 வரை ரத்து செய்யப்படுகிறது வழக்கமான புறப்படும் நேரம்: இரவு 11.55.

43801
எண் கொண்ட சென்னை கடற்கரை – அரக்கோணம் ரயில் ஜூன் 12-ம் தேதி மட்டும் ரத்து செய்யப்படுகிறது. வழக்கமான புறப்படும் நேரம்: காலை 1.20.

43101
எண் கொண்ட மூர் மார்க்கெட் – பட்டாபிராம் மில்லிடரி சைடிங் ரயில் ஜூன் 12 – 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. வழக்கமான புறப்படும் நேரம்: காலை 04.15.

43205
எண் கொண்ட மூர் மார்க்கெட் – திருவள்ளூர் வரை செல்லும் ரயில் ஜூன் 12-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. வழக்கமான புறப்படும் நேரம்: காலை 05.40.

43002
எண் கொண்ட ஆவடி – மூர் மார்க்கெட் வரை செல்லும் ரயில் ஜூன் 12 – 14-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. வழக்கமான புறப்படும் நேரம் காலை 03.50.

43204
எண் கொண்ட திருவள்ளூர் – மூர் மார்க்கெட் வரை செல்லும் ரயில் ஜூன் 12-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. வழக்கமான புறப்படும் நேரம்: காலை 04.45.

43102
எண் கொண்ட பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் – மூர் மார்க்கெட் வரை செல்லும் ரயில் ஜூன் 14-ம் தேதிக்கு ரத்து செய்யப்படுகிறது. வழக்கமான புறப்படும் நேரம்: காலை 03.20.

43104
எண் கொண்ட பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் – மூர் மார்க்கெட் வரை செல்லும் ரயில் ஜூன் 12-ம் தேதி மட்டும் ரத்து செய்யப்படுகிறது. வழக்கமான புறப்படும் நேரம்: காலை 05.30.

43004
எண் கொண்ட ஆவடி – மூர் மார்க்கெட் வரை செல்லும் ரயில் ஜூன் 14-ம் தேதி மட்டும் ரத்தாகிறது. வழக்கமான புறப்படும் நேரம்: காலை 04.00.

மாற்றப்பட்ட ரயில்கள் விவரம்:

443132
எண் கொண்ட பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் – மூர் மார்க்கெட் வரை செல்லும் ரயிலானது ஆவடி – மூர் மார்க்கெட் வழித்தடத்தில் இருந்து ஜூன் 11 முதல் 13-ம் தேதி வரை செல்லும். புறப்படும் நேரம்: இரவு 10.45.

43501
எண் கொண்ட மூர் மார்க்கெட் – திருவள்ளூர் வரை செல்லும் ரயிலானது, மூர் மார்க்கெட் – ஆவடி வழித்தடத்தில் இருந்து ஜூன் 14-ம் தேதி இயக்கப்படும். புறப்படும் நேரம்: காலை 03.50.

43201
எண் கொண்ட மூர் மார்க்கெட் – திருவள்ளூர் ரயிலானது, மூர் மார்க்கெட் – ஆவடி வழித்தடத்தில் இருந்து ஜூன் 12, 14 ஆகிய தேகிகளில் இயக்கப்படும் புறப்படும் நேரம்: காலை 04.30.

43932
எண் கொண்ட அரக்கோணம் – வேளச்சேரி ரயிலானது, அரக்கோணம் – சென்னை கடற்கரை வழித்தடத்தில் இருந்து ஜூன் 12-ம் தேதி இயக்கப்படும். புறப்படும் நேரம்: காலை 04.00.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.