மலையாளத்தை புரிந்து நடிப்பது கஷ்டமாக இருக்கிறது ; ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமாவில் கதாநாயகர்களுடன் டூயட் பாடும் கதாபாத்திரங்களை ஒதுக்கிவிட்டு கதையின் நாயகியாக தனக்கான படங்களை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். கவனித்துப் பார்த்தால் அவரது படங்கள் சீரான இடைவெளியில் தொடர்ந்து வெளியாவதை உணர முடியும். அதற்கு காரணம் அவர் மற்ற நடிகைகளை போல மலையாளம், தெலுங்கு போன்றவற்றில் நடிப்பதற்கு மிகப்பெரிய ஆர்வம் காட்டுவதில்லை. அப்படியும் கூட தற்போது மலையாளத்தில் மூன்று படங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ஜோமோண்டே சுவிசேஷங்கள் என்கிற படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ், பின்னர் நிவின்பாலிக்கு ஜோடியாக சகாவு என்கிற படத்திலும் நடித்தார். தற்போது புலிமட, ஹெர் மற்றும் அஜயண்டே ரெண்டாம் மோசனம் உள்ளிட்ட மூன்று படங்களில் நடித்து முடித்து விட்டார். ஆனாலும் கொஞ்ச நாளைக்கு மலையாள படங்களில் நடிப்பதற்கு இடைவெளி விடப்போவதாக கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இது குறித்த அவர் கூறும்போது, “மலையாள படங்களில் நடிப்பதற்கு ரொம்பவே ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் அந்த மொழியை பேசுவதற்கும் புரிந்து கொள்வதற்கு மிகவும் சிரமமாக இருப்பதால் படங்களில் நடிப்பதற்கும் எனக்கு சிரமமாகவே இருக்கிறது. அதனால் இன்னும் கொஞ்ச நாட்கள் சிரத்தை எடுத்து அந்த மொழியை புரிந்து கொண்டு பின்னர் மலையாள படங்களில் நடிக்கலாம் என முடிவு எடுத்துள்ளேன்” என்று கூறியுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.