விதவை சான்றிதழை ஒரு வார காலத்திற்குள் அளிக்க முதல்வர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்: சு.வெங்கடேசன் கோரிக்கை

சென்னை: விதவை சான்றிதழை ஒரு வார காலத்திற்குள் அளிக்க வேண்டுமென முதல்வர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”மக்கள் சந்திப்பு இயக்கத்தில் ஒரு வயது கைக்குழந்தையோடு வந்த பெண் கலங்கிய கண்களோடு சொன்னார். “விதவை சான்றிதழுக்கு விண்ணப்பித்து 6 மாதமாகிவிட்டது. அலையாய் அலைகிறேன். கிடைக்கவில்லை” என்று. அதிகாரிகள் ஏதேதோ காரணம் சொன்னார்கள்.

அந்த பெண்ணுக்கு சான்றிதழ் கொடுக்காமல் முகாமை முடிக்கமாட்டேன் என்று கூறிவிட்டேன். இரவு 7 மணிக்கு சான்றிதழை கொடுத்து முகாமை முடித்தோம். விதவை சான்றிதழ் ஒரு வார காலத்திற்குள் தரப்பட வேண்டுமென முதல்வர் உத்தரவு பிறப்பித்து இதுபோன்ற கொடுமைகளுக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும்.” இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


— Su Venkatesan MP (@SuVe4Madurai) June 10, 2023

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.