2வது திருமணத்திற்கு தடையாய் இருந்த 6 வயது மகள்… கோடரியால் வெட்டி கொன்ற கொடூர தந்தை!

கேரள மாநிலத்தில்தான் இந்த நடு நடுங்க வைக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம், ஆனக்கூட்டில் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீமகேஷ். 38 வயதான இவருக்கு வித்யா என்ற மனைவியும், நக்‌ஷத்ரா என்ற 6 வயது மகளும் இருந்தனர். ஸ்ரீமகேஷ் குடும்பத்துடன் துபாயில் பணி புரிந்து வந்தார்.

அவரது மனைவி வித்யாவும் துபாயில் பணிபுரிந்து வந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீமகேஷின் தந்தை ஸ்ரீமுகுந்தன் ரயில் மோதி மரணமடைந்தார். தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக ஊருக்கு வந்த ஸ்ரீமகேஷ், மீண்டும் துபாய் செல்லவில்லை.

கல்யாணம் ஆகாமல் இருந்திருந்தால் தனுஷ்தான் என் கணவர்… மிரள வைத்த சீரியல் நடிகை!

மறுமணம் செய்துகொள்ள விரும்பிய ஸ்ரீமகேஷ், பெண் பார்க்கும் படலத்தில் இறங்கியுள்ளார். ஆனால் ஸ்ரீமகேஷுக்கு 6 வயதில் மகள் இருந்ததால் யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை என தெரிகிறது. இதனால் வெறுப்பான ஸ்ரீமகேஷ் தனது 6 வயது மகளை கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு ஸ்ரீமகேஷும், அவர் மகள் நக்‌ஷத்ராவும் வீட்டில் இருந்துள்ளனர். ஸ்ரீமகேஷின் சகோதரி, அவரது வீட்டுக்கு அருகிலேயே வசித்து வருவதால், ஸ்ரீமகேஷின் தாய் சுனந்தா, அங்கு சென்றுள்ளார். திடீரென ஸ்ரீமகேஷின் மகள் நக்ஷத்ராவின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து சுனந்தா தனது வீட்டிற்கு ஓடி வந்து பார்த்துள்ளார்.

பள்ளி மாணவர்களின் கனவுகளைக் கலைத்திருப்பது நியாயமா? அண்ணாமலை கடும் கண்டனம்!

அப்போது, நக்‌ஷத்ரா கழுத்தில் வெட்டுப்பட்ட நிலையில் சோஃபாவில் ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளார். அருகிலேயே கோடரியுடன் அவரது தந்தையான ஸ்ரீமகேஷ் நின்றுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சுனந்தா கத்தி கூச்சலிட்டுள்ளார். அப்போது தனது தாயையும் கோடரியால் கையில் வெட்டிய ஸ்ரீமகேஷ், தடுக்க வந்த ஊர்க்காரர்களையும் கோடரியை காட்டி மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து ஸ்ரீமகேஷை கைது செய்தனர். அதற்குள் நக்ஷத்ரா உயிரிழந்துவிட்டார். காயமடைந்த சுனந்தாவை போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகளை கொடூரமாக கொலை செய்த ஸ்ரீமகேஷை போலீசார் சிறைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் திடீரென கை நரம்பு மற்றும் கழுத்தில் பிளேடால் அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுமண தம்பதியா நீங்க? இனி ரயில்லேயும் வளைச்சு வளைச்சு போட்டோ எடுக்கலாம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.